மாருதி சுசூகி எஸ் க்ராஸ் கிராஸ்ஓவர் ரக மாடலில் கூடுதல் வசதிகளை இணைத்து எஸ் க்ராஸ் பிரிமியா என்ற பெயரில் சிறப்பு பதிப்பினை மாருதி சுசூகி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்டா DDiS 200 வேரியண்டினை பிரபலப்படுத்தும் நோக்கில் சிறப்பு பதிப்பு வந்துள்ளது.
மாருதி எஸ் க்ராஸ் கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 90 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் ஃபியட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ ஆகும்.
எஸ் க்ராஸ் பிரிமியா பதிப்பில் அலாய் வீல் , பனி விளக்கு , ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கேமரா மற்றும் கார்மைன் 5 இஞ்ச் நேவிகேஷன் டிஸ்பிளே சேர்க்கப்பட்டுள்ளன. நிரந்தர வேரியண்டில் ஸ்டீல் வீல் , சிடி பிளேயர் மெனுவல் ஏசி உள்ளது.
எஸ் க்ராஸ் காரில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் ஆகும். மாருதி சுசூகி எஸ் க்ராஸ் பிரிமியா விலை ரூ.8.99 லட்சம் ( டெல்லி எக்ஸ்ஷோரூம் )
Maruti S-cross premia special edition launched