பல கூடுதல் வசதிகளை கொண்டுள்ள எக்ஸ்க்ளூசிவ் எக்ஸ்யூவி 500 காரில் முக்கிய அம்சமாக எலக்ட்ரிக் உதவியுடன் இயங்க கூடிய ஆன்டி பிஞ்ச் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சன்ரூஃப் சேர்க்கப்பட்டுள்ளது.
6 வகைகளில் எலக்ட்ரிக் உதவியுடன் ஓட்டுனர் இருக்கையை நம் தேவைக்கேற்ப் மாற்ற முடியும். 6 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணைய இணைப்பு, பின்புற கேமிரா போன்றவற்றை பயன்படுத்த முடியும்.
ஜிபிஎஸ், சிடி, டிவிடி, பன்பலை, ஐ பாட், யூஎஸ்பி தொடர்பு , வாய்ஸ் மெஸ்ஜ் அமைப்பு, ஹைட்ராலிக் உதவியுடன் பானேட் , எக்ஸ்யூ500 என பொறிக்கப்பட்ட ஸ்க்ஃப் பிளேட், அலுமினிய பெடல்கள், கிரே வண்ணத்தில் ஆலாய் வீல்கள் போன்ற வசதிகளும் கிடைக்கும். மேலும் முழுமையான தானியங்கி ஏசி , பின்புற பார்க்கிங் வசதிகளும் அடங்கும்.
6 காற்றுப்பைகளை கொண்டுள்ள எக்ஸ்யூவி 500 காரில் இஎஸ்பி , ரோல்ஓவர் மைகிரேசன் , ஏபிஎஸ் பிரேக்குடன் கூடிய இபிடி, மலையேற இறங்க உதவியான ஹீல் ஹோல்ட் மற்றும் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.
என்ஜினில் எவ்விதமான மாற்றமும் இல்லை. முந்தைய 140எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் எம்-ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்க்ளூசிவ் எடிசன் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எக்ஸ்க்ளூசிவ் எடிசன் விலை (ex-showroom chennai)
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W8 – ரூ.14.59 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W8 – ரூ.14.75 லட்சம் (6 way power adjust seat)
Mahindra XUV500 Xclusive Edition Launched Priced at Rs. 14.59 Lakh