அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள சக்திவாய்ந்த போக்ஸ்வேகன் போலோ GTI 3 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் மாடலின் டீஸர் படம் வெளியாகியுள்ளது. போலோ ஜிடிஐ காரின் ஆற்றல் 190hp வரை வெளிப்படுத்தும்.
கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த போலோ ஜிடிஐ அதனை தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றது. போலோ ஜிடிஐ விற்பனைக்கு வரும்பொழுது இந்தியாவின் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக விளங்கும்.
இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள போலோ ஜிடிஐ காரில் 190 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 250 Nm ஆகும். இதில் 7 வேக DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.7 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். போலோ GTI காரின் உச்சவேகம் மணிக்கு 235 கிலோமீட்டர் ஆகும்.
பல்வேறு விதமான நவீன வசதிகளை பெற்றதாக வரவுள்ள ஜிடிஐ காரில் எல்இடி முகப்பு விளக்குகள் ,17 இன்ச் அலாய் வீல் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பலவற்றை பெற்றிருக்கும். அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள போக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரின் விலை ரூ.20 லட்சத்தில் அமையலாம்.