ரூ.30 இலட்சம் விலையில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்களின் தொகுப்பு
1. டொயோட்டா ஃபார்ச்சூனர்
விற்பனையில் தரத்திலும் முன்னிலையில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் தனக்கான தனியான முத்திரையுடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 3.0 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் தானியங்கி மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ்களிலும் 4×2 4×4 டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
2. ஹூண்டாய் சான்டா ஃபீ
ஹூண்டாய் சான்டஃபீ எஸ்யூவி காரும் இந்திய சந்தையில் விற்பனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பதிவு செய்துவருகின்றது. 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கி மற்றும் மெனுவல் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. 4×2 4×4 டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
3. மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்
மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி காரும் மிக சிறப்பான எஸ்யூவி ஆகும். 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கொண்டதாகும்.
4. ஃபோர்டு எண்டெவர்
ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிக சிறப்பான காராகும். இந்திய சந்தையில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை. புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு எண்டெவர் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
வரவிருக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர் |
5. செவர்லே கேப்டிவா
சாஃப்ட் ரோடு எஸ்யூவியாக விளங்கும் கேப்டிவா விற்பனையில் பெரிதாக பிராகாசிக்க வில்லை என்றாலும் மிக நேர்த்தியான தோற்றத்தில் விளங்கும். 2.2 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மெனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.
மேலும் சந்தையில் உள்ள எஸ்யூவி கார்கள் ஹோண்டா சிஆர்-வி, ஸ்கோடா எட்டி , மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டான் , ரெனோ கோலிஸ் மற்றும் இசுசூ எம்யூ-7 போன்றவை விற்பனையில் உள்ளது.
வரவிருக்கும் செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஃபார்ச்சூனருக்கு மிகுந்த சவாலினை ஏற்ப்படுத்தும்.