முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படும் ஐ8 கார் மிக நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ளது. ஐ8 கார் கார்பன் ஃபைபரால் உருவாக்கி உள்ளதால் இதன் எடை வெறும் 1485 கிலோ மட்டுமே.
357பிஎச்பி ஆற்றல் தரவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 228பிஎச்பி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என்ஜின் ஆற்றல் 129பிஎச்பி ஆகும். இதன் மொத்த ஆற்றல் 357பிஎச்பி ஆகும்.
0 முதல் 100 கிமீ வேகத்தினை வெறும் 4.4 விநாடிகளில் எட்டிவிடும். மேலும் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஆற்றல் மூலம் 37கிமீ வரை இயக்கலாம். பிஎம்டபிள்யூ ஐ8 கார் மைலேஜ் லிட்டருக்கு 47.45கிமீ ஆகும்.
மூன்று விதமான மோடுகளில் ஐ8 காரை இயக்க முடியும். அவை ஈக்கோ , புரோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகும்.
ஒரு வேரியண்டில் மட்டும் கிடைக்கும் ஐ8 கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதாவது 8 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ8 கார் விலை ரூ.2.29 கோடி (ex-showroom India)