டாடா நானோ காரானது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு தயாராகி வருகின்றது. டாடா நிறுவனம் நானோ காரின் புதுப்பித்து சிறப்பு எடிசனாக விரைவில் வெளியிட உள்ளது. அதனை தொடர்ந்து சிஎன்ஜி வகையிலும் வெளிவரும்.
ஆனால் டாடா நானோவின் விற்பனை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. கடந்த சனவரி 2012 ஆம் ஆண்டில் 7723 கார்களை விற்றள்ளது. ஆனால் கடந்த மாதம் சனவரி 2013யில் வெறும் 1504 கார்களை மட்டுமே உள்ளது. உலகின் மிக விலை மலிவான காராக இருந்த பொழுதும் விற்பனை மிக பெரிதாக சரிவடைந்துள்ளது. பல்வேறு நுட்ப காரணங்களால் ஆரம்பத்தில் சில மோசமான முத்திரை பதிந்து விட்டது.
புதிய ஸ்பெஷல் பதிப்பில் வரவுள்ள வசதிகள் உட்புற தோற்றத்தில் சில மாற்றங்கள், மியூசிக் சிஸ்டம், ஆலாய் சக்கரம், ஸ்பீடோ மீட்டரில் மாற்றங்கள் இருக்கும்.
ஸ்பெஷல் எடிசனை தொடர்ந்து சிஎன்ஜி வகையில் விரைவில் வரவுள்ளது.