வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி டாடா டியாகோ கார் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸீகா என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டு பெயர் மாற்றப்பட்ட டியாகோ பலமுறை தள்ளி போன நிலையில் தற்பொழுது 6 , ஏப்ரல் 2016யில் வருவது உறுதியாகியுள்ளது.
69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8 bhp மற்றும் டார்க் 114 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஏஎம்டி கியர்பாக்சிலும் வர வாய்ப்புகள் உள்ளது.
இம்பேக்ட் டிசைன் மொழி வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ கார் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டியாகோ காரினை அடிப்படையாக கொண்ட டாடா கைட்5 செடான் கார் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது.
ரூ.10,000 செலுத்தி டாடா டியாகோ காரினை முன்பதிவு செய்யப்படுகின்றது. சிறப்பான வசதிகளுடன் டாடா மோட்டார்ஸ் தரம் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க ; டாடா டியாகோ கார் வாங்கலாமா ?
[envira-gallery id=”3889″]