வருகின்ற 7ந் தேதி டட்சன் ரெடி-கோ கார் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டட்ஸன் இந்தியா அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் டட்ஸன் ரெடி-கோ விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.
ரூ. 2.50 லட்சம் தொடக்க விலையில் எதிர்பார்க்கப்பட்ட ரெடி-கோ காரின் பேஸ் வேரியண்ட் ரூ.2,39,500 என தொடக்க விலையில் வரவுள்ளது. க்விட் ஆல்ட்டோ 800 , இயான் போன்ற கார்களை விட குறைவான விலையில் அமைந்துள்ளது. அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றும் பொழுது தவறுதலாக விலை விபரம் வெளியாகிவிட்டதாக தெரிகின்றது.. நிச்சியமாக இந்த தொடக்க விலையில் தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது
க்விட் கார் பெற்றுள்ள 800சிசி என்ஜினே பெற்றுள்ள ரெடி-கோ காரின் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.
ஸ்டைலிசான தோற்ற அமைப்பில் க்ராஸ்ஓவர் கார்களுக்கு இணையாக வடிவமைப்பட்டுள்ள ரெடி-கோ காரில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , முன்பக்க பவர் வின்டோஸ் , பவர் ஸ்டீயரிங் மற்றும் ஆடியோ சிஸ்டத்தில் சிடி , ரேடியோ ,யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போன்றவற்றை இணைத்துள்ளது.
டட்சன் ரெடி-கோ சிறப்பு பார்வை
ரெடி-கோ காரின் தொடக்க விலை ரூ.2.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி )
Datsun Redi-Go photo gallery
[envira-gallery id=”7303″]