செவர்லே செயில் யுவா டீசல் காரின் பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பர் 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட செயில் யுவா காரில் தற்பொழுது பேஸ் டீசல் வேரியண்ட் இனைக்கப்பட்டுள்ளது.
செயில் யுவா பிஎஸ் டீசல் காரில் உள்ள சிறப்பம்சங்கள் ஃப்ரன்ட் பவர் வின்டோ, எலெக்ட்ரிக் துனையுடன் இயங்கும் விங் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ்யுடன் EBD வசதிகள் உள்ளன.
1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் அதிகப்பட்ச ஆற்றல் 79பிஎஸ் மற்றும் டார்க் 205என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
செயில் யுவா டீசல் காரின் மைலேஜ் 22 kmpl(ARAI certified)
செயில் யுவா டீசல் காரின் விலை ரூ 5.29 இலட்சம் (ex-showroom, Delhi)ஆகும்.
மாருதி ஸ்விஃபட் காரை விட ரூ 30000 குறைவாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.