டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு டாடா அதிரடியான விலை குறைப்பு செய்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் மிக கடுமையாக போராடி வருகின்றது. இந்த நிலையில் டாடா விலை குறைப்பு டாடாவின் வளர்ச்சி அதிகரிக்குமா என்பதனை காலம்தான பதில் சொல்ல வேண்டும்.
டாடா இன்டிகா, விஸ்டா,மான்ஸா, மற்றும் இன்டிகோ கார்களை ரூ 29,000 முதல் 50,000 வரை விலையை குறைத்துள்ளது. டாடா நானோவின் விலையில் மாற்றங்கள் இல்லை.
எஸ்யூவி கார்களின் மேல் உயர்த்தப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக சுமோ,ஸ்ஃபாரி ஸ்டோர்ம், ஆர்யா கார்களின் ரூ 35,000 முதல் 50000 வரை விலையை உயர்த்தியுள்ளது.
டாடா மான்ஸா EXL மாறுபட்ட வகையினை உற்பத்தியை நிறுத்துகின்றது. தற்பொழுது டீலர்களிடம் உள்ள ஸ்டாக்களுக்கு மட்டும் ரூ 70,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.
மேலும் ஒரு அட்டகாசமான வாய்ப்பை வழங்குகிறது.
மான்ஸா கிளப் கிளாஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் கழித்து காரை விற்க விரும்பினால், காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே வாங்கிக் கொள்ளுமாம். காரின் விலையில் 60 சதவீதத்தை திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மான்ஸா புதிய விலை விபரங்கள்
மாடல் | முந்தைய விலை |
புதிய விலை |
MANZA LX QJET 90PS BS4 | ரூ.6,49,337 | ரூ.5,99,500 |
MANZA LX QJET 90PS BS4 | ரூ.6,93,729 | ரூ.6,54,873 |
MANZA VX QJET 90PS BS4 | ரூ.7,55,048 | ரூ.7,19,402 |
MANZA EX QJET 90PS BS4 | ரூ.8,43,264 | ரூ.8,14,409
|