ஃபிகோ ஆஸ்பயர் காரில் 6 காற்றுப்பைகள் மற்றும் பல புதிய வசதிகள் காம்பேகட் ரக செடான் பிரிவில் முதன்முறையாக வந்துள்ளது.
தோற்றம்
மிக சிறப்பான டைனமிக் தோற்றத்தில் விளங்கும் ஃபிகோ ஆஸ்பர் காரின் முகப்பு சிறப்பாக உள்ளது. பக்கவாட்டிலும் கவர்ந்திழுக்கின்றது. மொத்தம் 7 வண்ணங்களில் ஆஸ்பயர் கிடைக்கும். அவை சிவப்பு , கருப்பு , நீலம் , சில்வர் , கோல்டு , வெள்ளை மற்றும் கிரே ஆகும்.
உட்புறம்
ஃபோர்டு கார்களின் பாரம்பரியமான உட்புற அமைப்பில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும். இதன் பூட் வசதி 359 லிட்டர் கொள்ளளவு ஆகும்.
என்ஜின்
ஆஸ்பயர் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வகைகளில் கிடைக்கும்.
அவை 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 87பிஎச்பி ஆகும் இதன் முறுக்கு விசை 112என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வகையிலும் கிடைக்கும். இதன் ஆற்றல் 110பிஎச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 136என்எம் ஆகும் 6 வேக டிசிடி (dual-clutch transmission -DCT) தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆற்றல் 98.6பிஎச்பி ஆகும். இதன் முறுக்கு விசை 215என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபிகோ ஆஸ்பயர் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ மறும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17 கிமீ ஆகும். டீசல் ஆஸ்பயர் மைலேஜ் லிட்டருக்கு 25.83கிமீ ஆகும்.
பாதுகாப்பு வசதிகள்
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரின் டாப் வேரியண்டில் மொத்தம் 6 காற்றுப்பைகள் உள்ளன. அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் நிரந்தரமாகும். மேலும் ஏபிஎஸ் , இபிடி , ஹீல் அசிஸ்ட் , வாகனத்தை பார்க்கிங் செய்ய உதவும் அலாரம் போன்றவை உள்ளது.
சிறப்பம்சங்கள்
ஃபோர்டு மைகீ , மை ஃபோர்டு டாக் , சிங்க வித் ஆப் லிங் , அனைத்து வேரியண்டிலும் இரட்டை காற்றுப்பைகள் , டாப் வேரிண்டில் 6 காற்றுப்பைகள் , ஃபோர்டு அவசரகால உதவி , போன்றவை குறிப்பிடதக்கதாகும்.
மேலும் படிக்க ; ஃபிகோ ஆஸ்பயர் காரின் சிறப்புகள் முழுவிபரம்
போட்டியாளர்கள்
ஃபிகோ ஆஸ்பயர் போட்டியாளர்கள் ஸ்விஃப்ட் டிசையர் , அமேஸ் , ஜெஸ்ட் , எக்ஸ்சென்ட் போன்ற கார்களுக்கு சவாலை தரவுள்ளது.