ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் எஸ்கியூசிட் என்ற பெயரில் பண்டிகை காலத்தினை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வென்ட்டோ காரிலும் புதிய ஹைலைன் ப்ளஸ் வேரியண்டினை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல போலோ காரில் எஸ்கியூசிட் சிறப்பு பதிப்பில் சில கூடுதல் துனைகருஙிகளை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
கருப்பு நிற ஃபினிஷ் மேற்கூரை , வின்டோஸ் கண்ணாடிகளுக்கு திரை , பாடி சைட் மோல்டிங் , ஓஆர்விஎம் கார்பன் கவர் , புதிய மிதியடிகள் , ஸ்க்ஃப் பிளேட் , இருக்கை கவர் மற்றும் டேஸ்போர்டு சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஜிடி மாடல்களில் இந்த சிறப்பு பதிப்பு இடம் பெறவில்லை. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல்களில் ஹைலைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
மேலும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் எஸ்கியூசிட் சிறப்பு பதிப்பில் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
Volkswagen Polo Exquisite launched