ஃபியட் லீனியா காரின் சிறப்பு பதிப்பாக ஃபியட் லீனியா எலகன்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. சில துனை கருவிகள் இணைக்கப்பட்டு தோற்றத்திலும் ஃபியட் லீனியா எலகன்ட் மாற்றத்தினை பெற்றுள்ளது.
ஃபியட் லீனியா எலகன்ட் |
ஃபியட் லீனியா எலகன்ட் மாடலின் வெளிதோற்றம் மற்றும் உட்புறத்தில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. என்ஜினில் எந்த மாறுதல்களும் இல்லை.
முகப்பில் புதிய கருப்பு நிற கிரில் , பக்கவாட்டில் பாடி ஸ்கர்ட் , எலகன்ட் பெயர் பொறிக்கப்பட்ட பாடி ஸ்டிக்கர் , 16 இஞ்ச் ஆலாய் வீல் , மேற்கூரை கருப்பு நிற வண்ணத்தில் , ஸ்போர்ட்டிவ் ரியர் ஸ்பாய்லர் போன்றவற்றை பெற்றுள்ளது.
உட்புறத்தில் 6.5 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , புதிய இருக்கைகள் , கார்பெட் மற்றும் கதவு சில்களை பெற்றுள்ளது.
92பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 112பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.4 லிட்டர் டி ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஃபியட் லீனியா எலகன்ட் விலை ரூ.9.99 லட்சம் (`EX-showroom Delhi)
Fiat Linea Elegante limited edition launched