மீண்டும் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஏக்டிவ் காரில் 6 காற்றுப்பைகளை டாப் ஆஸ்டா (O) வேரியண்டில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எலைட் ஐ20 காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மேக்னா வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய தலைமுறை ஐ20 காரின் டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகளும் அறிமுகம் செய்திருந்த நிலையில் புதிய எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஏக்டிவ் காரில் இரு காற்றுப்பைகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஆஸ்டா (O) மற்றும் SX (i20 ஏக்டிவ்) வேரியண்டில் முன்பக்க இருகாற்றுப்பைகள் , பக்கவாட்டு மற்றும் கர்டெயின் காற்றுப்பைகள் 4 என மொத்தம் 6 ஏர்பேகினை பெற்றுள்ளது. மற்ற வேரியண்ட்களில் ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணிக்கான காற்றுப்பை மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும்.
விலை விபரம்
எலைட் ஐ20 Asta (O) – ₹. 7,87,773 (1.2 Kappa பெட்ரோல்)
எலைட் ஐ20 Asta (O) – ₹. 9,15,762 (1.4L U2 CRDi டீசல்)
ஐ20 ஏக்டிவ் SX – ₹. 846,654 (1.2 Kappa பெட்ரோல்)
ஐ20 ஏக்டிவ் SX – ₹. 986,483
(சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)
எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக்
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் ஐ20 மேக்னா வேரியண்டில் இடம்பெற்றிருக்கும். இதில் 99.3 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் காமா VTVT பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் டார்க் 130 Nm ஆகும். அடுத்த சில வாரங்களில் எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வரவுள்ளது.
எலைட் ஐ20 ஆட்டோமேட்டிக் பற்றி படிக்க