இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 20வது வருட கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் நிலையில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் செடான் காரின் சிறப்பு எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 20வது வருட எக்ஸ்சென்ட் சிறப்பு பதிப்பு S வேரியண்டில் மட்டுமே 2400 கார்கள் மட்டுமே கிடைக்கும். வெள்ளை மற்றும் சில்வர் என இரு விதமான வண்ணங்களை மட்டுமே பெற்றிருக்கும் பதிப்பில் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.
சாதரன எஸ் வேரியண்டினை விட ரூ.16,999 கூடுதலாக பெற்றுள்ள சிறப்பு பதிப்பில் பக்கவாட்டு பாடி கிராஃபிக்ஸ் , முன்பக்க கிரிலின் அடிபகுதி கிரில் கோடுகளில் குரோம் பூச்சூ , பின்புறத்தில் குரோம் பூச்சு , பூட் லிட் ஸ்பாய்லருடன் இணைந்த ரிஃப்லெக்டர் மற்றும் 20வது வருட ஆனிவர்சரி பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த அப்ல்ஸரி மற்றும் 6.2 இஞ்ச் தொடுதிரை பிளாபங்கட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்சென்ட் என்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 72 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.1 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றுள்ளது.
எக்ஸ்சென்ட் சிறப்பு எடிசன் விலை பட்டியல்
எக்ஸ்சென்ட் பெட்ரோல் – ரூ.6.22 லட்சம்
எக்ஸ்சென்ட் டீசல் – ரூ.7.15 லட்சம்
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }