பிரசத்தி பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரில் இன்டெலி-ஹைபிரிட் (Intelli-hybrid) எனப்படும் மைக்ரோ ஹைபிரிட் ஆப்ஷனை பெற்ற மாடலை விற்பனைக்கு ரூ.12.84 லட்சத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாருதி சியாஸ் காரில் உள்ள SHVS போன்ற சிறிய அளவிலான ஹைபிரிட் செயல்பாடுகளை கொண்ட ஆப்ஷனில் 2.2 லிட்டர் எம்ஹாக் இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கார்ப்பியோ இன்டெலி-ஹைபிரிட் அமைப்பில் தானியங்கி முறையில் இயங்கும் இஞ்ஜின் ஆன்/ஆஃப் வசதி , பிரேக் ஆற்றலை சேமித்து திரும்ப பயன்படுத்தும் பிரேக் ரீஜெனேரேட்டிவ் ஆப்ஷன் , ஸ்டோரேஜ்பேட்டரி மற்றும் ஸ்டார்ட்டர் மோட்டார் செயல்பட உதவும் வகையிலான பேட்டரியுடன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அளவிலான இஞ்ஜின் ஆற்றலை பூஸ்ட் செய்து கொடுக்கும். முழுமையான எலக்ட்ரிக் ரன்னிங் இல்லாமல் மைக்ரோ அளவிலான எலக்ட்ரிக் ரன்னிங் காராக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி விளங்கும்.
மஹிந்திரா இன்டெலி – ஹைபிரிட் ஆப்ஷனை S4, S4+, S4+, 4wd, S6+, S8, S10 2WD (Manual) மற்றும் S10 4WD (Manual) என அனைத்து வேரியண்டிலும் கிடைக்கின்றது. மேலும் 1.99 லிட்டர் என்ஜின் ஆப்ஷனிர் இந்த வசதி இடம்பெறலாம்.