நிசான் மைக்ரா சிவிடி கியர்பாக்ஸ் மாடல் ரூ.54,000 வரை விலை சரிந்து ரூ.5.99 லட்சத்தில் மைக்ரா XL வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விலை மலிவான ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பைக் காராக மைக்ரா விளங்கும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள நிசான் மைக்ரா ஹேட்ச்பேக் கார்களான ஸ்விஃப்ட் , எலைட் ஐ20 , போலோ மற்றும் புதிய வரவான மாருதி பலேனோ போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்திய சந்தையில் பெரிய அளவிலான வரவேற்பினை பெறவிட்டாலும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி கார் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
ரூ.6.53 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த மைக்ரா XL சிவிடி வேரியண்ட் தற்பொழுது ரூ.54,000 குறைந்து ரூ.5.99 லட்சத்திற்கு கிடைக்கும். மற்றொரு வேரியண்டான மைக்ரா XV சிவிடி ரூ. 46,000 விலை குறைந்து ரூ. 6.73 லட்சத்தில் (முந்தைய விலை ரூ.7.13 லட்சம்) கிடைக்கும். விலை குறைப்புக்கு முக்கிய காரணம் உள்நாட்டிலே சிவிடி காருக்கான பாகங்கள் தயாரிக்க தொடங்கியதாகும்.
விலை குறைப்பு பற்றி நிசான் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் திரு.அருன் மல்கோத்ரா கூறுகையில் மைக்ரா சிவிடி காரில் சிறப்பான நவீன தொழில்நட்பம் , பெர்ஃபாமென்ஸ் போன்றவற்றை வழங்க்ககூடிய பிரிமியம் ஹேட்ச்பேக் காராகும். மேலும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராகவும் சவாலான விலையில் அதிகப்படியான மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாகவும் சிறந்த பயண அனுபவத்தினை வழங்கும் காராக விளங்கும் என கூறியுள்ளார்.
மைக்ரா சிவிடி காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 76bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 104Nm வெளிப்படுத்தும். நிசான மைக்ரா சிவிடி மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிமீ ஆகும்.
மைக்ராசிவிடி காரில் உள்ள சில முக்கிய வசதிகள் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் புஸ் பட்டன் , ஸ்டீயரிங் வீல் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் ,ஸ்பீடு சென்சிங் கதவு லாக், முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , இஎஸ்பி (Electronic Stability Program – ESP) இபிடி (Electronic Brakeforce Distribution -EBD) , ஏபிஎஸ் ( Anti-lock Braking System – ABS ) மற்றும் பிரேக் அசிஸ்ட் போன்றவை உள்ளது.
நிசான் மைக்ரா சிவிடி விலை பட்டியல்
மைக்ரா XL சிவிடி – ரூ.5.99 லட்சம்
மைக்ரா XV சிவிடி – ரூ.6.73 லட்சம்
( விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் )