பிரபலமான தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலில் க்விட் ஏஎம்டி ரூ.4.25 லட்சம் விலையில் ஒற்றை வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது சாதரன கியர் லிவர் போன்று அல்லாமல் கியர் செலக்டார் ஆனது ரோடரி செலக்டர் போன்ற டயல் போன்ற திருகும் அமைப்பினை கொண்ட கியர் ஷிஃப்ட் டேஸ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது. Drive (D), Neutral (N) and Reverse (R) என மூன்று விதமான் மோட் உள்ளது கியர் லிவர் இருக்கும் இடத்தில் பொருட்களை வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ரெனோ க்விட் ஏஎம்டி 1.0லி SCe மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.04 கிலோமீட்டர் ஆகும்
க்விட் ஈசி-ஆர் RXT (O) வேரியன்ட் வசதிகள்
- தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன்
- பூளூடுத் , யூஎஸ்பி மற்றும் ஆக்ஸ் ஆதரவு
- டியூவல் டோன் டேஸ்போர்டு
- பாடிகலர் பம்பர்
- ரிமோட் கிலெஸ் என்ட்ரி மற்றும் சென்டர் லாக்கிங்
- முன்பக்க கதவுகளுக்கு
- பவர் விண்டோஸ்
- முன்பக்க கதவில் 2 ஸ்பிக்கர்கள்
- ரியர் பார்சல் டிரே
- முன்பக்க பனி விளக்குகள்
- 12V பவர் சாகெட்
சாதரன மாடலைவிட க்விட் ஏஎம்டி விலை ரூ.30,000 கூடுதலாக அமைந்து ரூ.4.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆல்ட்டோ கே10 ஏஜிஎஸ் மாடலுக்கு நேரடியான போட்டியாகவும் , நானோ ஏஎம்டி மற்றும் செலிரியோ ஏஎம்டி மாடல்களுக்கும் சவாலினை ஏற்படுத்தும்.
( டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )