குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் S600 மிகவும் பாதுகாப்பானது என பலகட்ட சோதனைகளின் மூலம் நிரூபித்துள்ளது என VR9 என்ற சர்வதேச பாதுகாப்பு சோதனை அமைப்பு வழங்கியுள்ளது.
530பிஎச்பி ஆற்றலை கொண்ட மிகவும் சக்திவாய்ந்த V12 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 830என்எம் ஆகும். இதில் 7G-TRONIC தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு 210கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி முதல் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் கூட இந்த காரினை துளைக்க இயலாது என்பதே இதன் சிறப்பு ஆகும். மிகவும் கடினதன்மை கொண்ட ஸ்டீல் மூலம் இதன் பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் எவ்விதமான வகையிலும் தீப்பற்றுவதற்கு வாய்ப்பேயில்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் S600 கார்டு காரில் மிகவும் உயர்தரமான மிச்செலின் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டயர்கள் வெடிகுண்டு தாக்குதல் போன்றவற்றில் சிக்கினாலும் 80கிமீ வரை பயணிக்க முடியும்..
இரவு நேர உதவி , மிகவும் தடிமனான லேமினேட்டடு கிளாஸ் பாலிகார்பனேட்டடு கலந்துள்ளதால் தீப்பற்றாது. காற்றில் புகை போன்றவை ஏற்பட்டாலும் உள்ளுக்குள் காற்றினை சுத்தப்படுத்தி தரும்.
4 அல்லது 5 இருக்கைகள் என தேவைக்கேற்ப ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். சொகுசு வசதியில் மிக சிறந்த காராக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கார்டு விளங்குகின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கார்டு கார் விலை
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு விலை ரூ.8.9 கோடி (Ex-showroom Delhi)