மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள பலேனோ காரில் பல நவீன அம்சங்களுடன் ஆப்பிள் கார் பிளே செயலியுடன் வந்துள்ள முதல் B+ ஹேட்ச்பேக் காராகும்.
தோற்றம்
பலேனோ கார் சிறப்பான தோற்றத்துடன் வி வடிவ முன்பக்க கிரிலுடன் இணைந்துள்ள பகல்நேர எல்இடி விளக்குகள் அழகாக உள்ளது. முன்பக்கத்தில் புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. பக்கவாட்டில் டாப் மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல் மற்றவையில் 15 இஞ்ச் வீலை பெற்றுள்ளது. பின்பக்கத்தில் எல்இடி டெயில் விளக்குகள் மற்ற்உம் ரூஃப் ஸ்பாயல்ர் போன்றவை சிறப்பான தோற்றத்தினை பலேனோ காருக்கு வழங்கியுள்ளது.
ரே நீலம் , ஃபயர் சிவப்பு , பிரிமியம் சிலவர் , ஆரஞ்ச் , அர்பன் நீலம் , வெள்ளை மற்றும் கிரே என மொத்தம் 7 வண்ணங்களில் பலேனோ கார் கிடைக்கின்றது.
உட்புறம்
மிக நேரத்தியான் இன்டிரியர் கருப்பு வண்ணத்தில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டு அழகான தோற்றத்தினை பெற்றுள்ளது. டேஸ்போர்ட் சென்டர் கன்சோலில் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பொத்தான்கள் , ஆப்பிள் கார்பிளே , நேவிகேஷன் யூஎஸ்பி , ஆக்ஸ், பூளூடூத் போன்றவை உள்ளது. கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா போன்றவை உள்ளது. பலேனோ காரின் பூட்ஸ்பேஸ் 339 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
என்ஜின்
மாருதி பலேனோ காரின் 83.1பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் K12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வந்துள்ளது.
பலேனோ காரின் 73.9 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.3லிட்டர் மல்டிஜெட் DDiS190 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
பலேனோ காரின் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.31 கிமீ மற்றும் மாருதி பலேனோ காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ ஆகும்.
பலேனோ சிவிடி |
பலேனோ சிறப்பம்சங்கள்
முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ், இபிடி , இருக்கை பட்டை பீரி டென்சனர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக உள்ளது. மேலும் நவீன அம்சங்களான ஆப்பிள் கார்பிளே , நேவிகேஷன் யூஎஸ்பி , ஆக்ஸ் பூளூடூத் போன்றவை உள்ளது.
பலேனோ இன்ஃபோடெயின்மென்ட் |
மாருதி சுசூகி பலேனோ கார் விலை
பலேனோ பெட்ரோல் மாடல்
சிக்மா : ரூ.4.99 லட்சம்
டெல்டா :ரூ.5.71 லட்சம்
ஜெட்டா : ரூ.6.31 லட்சம்
ஆல்ஃபா : ரூ.7.01 லட்சம்
சிவிடி : ரூ.6.76 லட்சம்
பலேனோ டீசல் மாடல்
சிக்மா : ரூ.6.16 லட்சம்
டெல்டா : ரூ.6.81 லட்சம்
ஜெட்டா : ரூ.7.41 லட்சம்
ஆல்ஃபா ; ரூ.8.11 லட்சம்
அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை