இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கே10 காரில் கூடுதல் வசதிகளை ஆல்டோ K10 பிளஸ் சிறப்பு எடிசன் மாடல் ரூ. 3.40 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆல்டோ K10 பிளஸ்
- 10 கூடுதலான வசதிகளை பெற்றதாக ஆல்டோ K10 பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது.
- டாப் வேரியண்டான ZXi-ல் மட்டுமே கே10 பிளஸ் பதிப்பு கிடைக்கும்.
- ரூ.3.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலையில் இந்த காரின் விலை தொடங்குகின்றது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் கிளைம்பர் காரின் போட்டியை ஈடுகட்டும் வகையிலே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆல்டோ K10 பிளஸ் மாடலில் சிறப்பு வசதிகள் 10 அம்சங்களை மாருதி இணைத்துள்ளது.
- ரியர் ஸ்பாய்லர்
- ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்.
- க்ரோம் வீல் ஆர்ச்
- பனிவிளக்கு அறையில் க்ரோம் கார்னிஷ்
- பியானோ வண்ணத்திலான ஸ்டீரீயோ
- சென்ட்ரல் லாக்கிங்
- பாடி நிறத்தில் கதவு கைப்பிடிகள் மற்றும் ஓஆர்விஎம்
- முன்பக்க ஜன்னல்களுக்கு பவர் வின்டோ வணதி
- க்ரோம் லைன் பெல்ட்
- பாடி சைடு மோல்டிங் பட்டை
டாப் வேரியன்டில் மட்டுமே இந்த கூடுதலாக வசதிகள் கிடைக்கும். 10 வசதிகளை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆல்ட்டோ கே10 காரில் 68 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 90 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. ஆல்ட்டோ கே10 காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.07 கிமீ ஆகும்.
மேலும் படிக்கலாமே…! ஆல்டோ கே10 செய்திகள் மற்றும் மாருதி சுசூகி கார் செய்திகள்..
Maruti Suzuki Alto K10 Plus Special Edition Launched details in Tamil