புதிய போர்ஷே கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலைவிட கூடுதலான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் என்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
4 விதமான வித்தியாசத்தில் போர்ஷே கேயேன் கிடைக்கும். அவை பெட்ரோல் மாடலில் கேயேன் எஸ் மற்றும் கேயேன் டர்போ ஆகும். டீசல் வகையில் பேஸ் மற்றும் கேயேன் எஸ் கிடைக்கும்.
பெட்ரோல் என்ஜின் விபரம்
1. கேயேன் எஸ் வகை காரில் 3.6 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 420எச்பி மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.
2. கேயேன் எஸ் வகை காரில் 4.8 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 520எச்பி மற்றும் முறுக்குவிசை 750என்எம் ஆகும்.
டீசல் என்ஜின் விபரம்
1. கேயேன் பேஸ் டீசல் வகையில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 245எச்பி மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.
2. கேயேன் எஸ் டீசல் வகையில் 4.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 385எச்பி மற்றும் முறுக்குவிசை 850என்எம் ஆகும்.
கேயேன் வடிவ மாற்றங்கள்:
கேயேன் தோற்றத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. அவை முகப்பு பாடி, விங்ஸ், காற்று பிளேட் போன்றவை ஆகும். பை-ஸனான் முகப்பு விளக்குகள், பகல் நேர எல்இடி விளக்குகள், 3டி அனுபவத்தினை தரவல்ல பின்புற விளக்குகள் போன்றவை உள்ளன. மேலும் புதுமையான வடிவமைப்பில் புகைப்போக்கி உள்ளது.
உடப்புற கட்டமைப்பு
மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்ட போர்ஷே கேயேன்யில் 4 விதமான சூழ்நிலைகள் கையாளக்கூடிய தானியிங்கி ஏசி பொருத்தப்பட்டுள்ளது. பானரோமிக் சன்ரூஃப் பெடல் லிஃப்ட் வசதியுடன், ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் டிரைவ் மோட் போன்றவற்றை கொண்டுள்ளது.
பாதுகாப்பான பயணம்
பாதுகாப்பான பயணத்தினை தரும் வகையில் போர்ஷே நிலைப்புதன்மை அமைப்பு, லேன் எச்சரிக்கை அமைப்பு, காற்று சஸ்பென்ஷன்கள், டயர் அழுத்தம் சரிபார்க்கும் அமைப்பு போன்றவை உள்ளன.
போர்ஷே கேயேன் விலை விபரம் ( எக்ஸ-ஷோரூம் டெல்லி)
கேயேன் டீசல்- 1.04 கோடி
கேயேன் எஸ் டீசல் – 1.21 கோடி
கேயேன் எஸ் (பெட்ரோல்)- 1.18 கோடி
கேயேன் டர்போ(பெட்ரோல்)- 1.74 கோடி.