மேம்படுத்தப்பட்ட புதிய ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் ரூ.9.34 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாட்ஜி ஸ்டெப்வே மாடலில் புதிதாக 16 வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
லாட்ஜி எம்பிவி கார் மாடலின் பிரிமியம் மாடலாக விளங்கும் ஸ்டெப்வே மாடலில் புதிதாக 16 மாற்றங்கள் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்பில் பெற்றுள்ளது. 7 அல்லது 8 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற ஸ்டெப்வே மாடலின் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 83 பிஹெச்பி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 108 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
புதிய லாட்ஜி ஸ்டெப்வே தோற்றம்
முன்பக்கத்தில் அமைந்துள்ள ஜூவல் ஸ்டட் கிரிலின் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.மேலும் அலுமினியம் ஃபினிஷ் ஸ்கிட் பிளேட் , பனி விளக்கு பீசல் , ஸ்டெப்வே ஸ்டிக்கரிங் , கருப்பு வண்ண மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட ரூஃப் ரெயில்கள் , மேம்படுத்தப்பட்ட டெயில் லேம்ப் மற்றும் 16 இஞ்ச் கன்மெட்டல் ஃபினிஷ் அலாய் வீல் பெற்றுள்ளது.
ஸ்டெப்வே இன்டிரியர்
இன்டிரியரில் பீஜ் மற்றும் பிரவுன் நிறத்திலான டைமன்டு வண்ண நூல் கொண்டு தைக்கப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி , இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.
ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே காரின் போட்டியாளர்கள் இன்னோவா க்ரீஸ்ட்டா, எர்டிகா , சைலோ போன்றவை ஆகும். ரெனோ நிறுவனம் வருட நிறைவை ஒட்டி தங்களுடைய அனைத்து மாடல்களுக்கும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்குகின்றது.
ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே விலை பட்டியல்
Renault Lodgy Stepway RXL 83bhp 8-Seater – ரூ. 9,43,831
Renault Lodgy Stepway RXL 108bhp 8-Seater – ரூ. 10,09,831
Renault Lodgy Stepway RXZ 83bhp 8-Seater – ரூ. 10,17,831
Renault Lodgy Stepway RXZ 108bhp 8-Seater – ரூ. 10,06,831
Renault Lodgy Stepway RXZ 108bhp 7-Seater – ரூ. 11,26,831
( அனைத்து டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )