மினி எஸ்யூவி காரினை போன்ற தோற்ற அமைப்புடன் எண்ணற்ற ரசிகர்களை பெற்ற ரெனோ க்விட் 1.0 இன்ஜின் மாடலில் கூடுதலாக RXL வேரியன்டை விற்பனைக்கு ரெனால்ட் வெளியிட்டுள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெனோ க்விட் 1.0
சமீபத்தில் ரெனோ க்விட் கார் புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த க்விட் கார் 1.30 லட்சம் என்கின்ற விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. முதன்முறையாக 0.8லி மாடலிலும் அதனை தொடர்ந்து 1.0லி மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்சிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
0.8லி இன்ஜின் ஆப்ஷனில் உள்ள RXL வேரியன்டை அடிப்படையாக கொண்ட மாடலை 1.0லி இன்ஜின் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வேரியன்டில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
RXL வேரியன்ட் விபரம்
- பாடி வண்ணத்தில் பம்பர்
- ஆடியோ வசதிகள்
- எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்
- கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த அப்ஹோல்ஸ்டரி
- பிரிமியம் முன்பக்க இருக்கைகள்
- ஆட்டோ ஆன்/ஆஃப் கேபின் விளக்கு
ரெனோ க்விட் RXL வேரியன்ட் விலை விபரம்
- 1.0 RxL – ரூ. 3.54 லட்சம்
- 1.0 AMT RxL – ரூ. 3.84 லட்சம்
( டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )
தற்பொழுது ரெனோ 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 1.0 RxL, 1.0 AMT RxL, 1.0 RxT, 1.0 RxT(O) மற்றும் 1.0 AMT RxT(O) என மொத்தம் 5 விதமான வகைகளில் கிடைக்கின்றது. 799சிசி என்ஜின் பொருத்தப்பட்ட க்விட் காரை விட ரூ.22,000 மட்டுமே கூடுதலாக அமைந்து 1.0 லிட்டர் என்ஜினை பெற்ற மேனுவல் மாடல் விளங்குகின்றது.
இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி காரின் விலையை விட குறைவாகவே புதிய க்விட் ஏஎம்டி விலை அமைந்துள்ளது. மிகப்பெரிய பலமாக ரெனால்ட் நிறுவனத்துக்கு அமைந்துள்ளது.