பிஎம்டபிள்யூ மினி பிராண்டின் கார்களின் சென்னை உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மினி கார் மாடல்களின் விலை முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலின் விலையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தோற்றம்
ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு குரோம் பட்டைகள் கிரிலில் , பம்பர்கள் , ஸ்கர்ட் , ஸ்கிட் பிளேட் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய 17 இஞ்ச் ஆலாய் வீல் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல் நேர விளக்குகள் , பனி விளக்குகளை ஆப்ஷனலாக பெற இயலும்.
உட்புறம்
மினி கன்ட்ரிமேன் காரின் உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் எண்ணத்தை தரும் வகையில் லெதர் இருக்கை , ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிங் வீல் , டேஸ்போர்டு வண்ணங்கள் மற்றும் கேபினில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 ஸ்பீக்கர்களை கொண்ட ரேடியோ மினி பூஸ்ட் சிடி மியூசிக் சிஸ்டம் உள்ளது.
என்ஜின்
110பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 270 என்எம் ஆகும். 6 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.
0 முதல் 100 கீம் வேகத்தை எட்ட 11.3 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மினி கன்ட்ரிமேன் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 185கிமீ ஆகும்.
பாதுகாப்பு வசதிகள்
மினி கன்ட்ரிமேன் காரில் 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , பிரேக் உதவி , டைனமிக நிலைப்பு தன்மை , டிராக்ஷன் கட்டுப்பாடு மற்றும் ரன் ஃபிளாட் இன்டிகேட்டர் உள்ளது.
புதிய மினி கார்களின் விலை விபரம் (ex-showroom Delhi)
மினி கூப்பர் D 3 Door : ரூ.28,50,000
மினி கூப்பர் D 5 Door : ரூ.31,90,000
மினி கூப்பர் S 3 Door : ரூ.31,50,000
மினி கூப்பர் Convertible : ரூ.33,90,000
மினி கூப்பர் D Countryman : ரூ.36,50,000
New Mini Countryman launched in India