புதிய சஃபாரி ஸ்ட்ராம் காரில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் , கூடுதல் வசதிகள் , தோற்ற மாற்றங்கள் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களை கண்டுள்ளது.
சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் Varicor டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 148பிஎச்பி ஆகும். முந்தைய மாடலை விட ஆற்றல் 10பிஎச்பி கூடுதலாகும். இதன் முறுக்கு விசை 320என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
முகப்பில் புதிய லேண்ட் ரோவர் குரோம் பூச்சு கொண்ட தேன்கூடு கிரில் போன்ற அமைப்பினை பெற்றுள்ளது. உட்புறத்தில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடுத் , ஆக்ஸ் உன் , யூஎஸ்பி , கருப்பு இன்டிரியர் உடன் கூடிய சில்வர் அசென்ட்ஸ், புதிய ஸ்டீயரிங் வீல் ஆடியோ கட்டுப்பாடு பொத்தானுடன் , பின்புற கேமரா , ஃபிளப் கீ போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
EX மற்றும் VX மாடல்களில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் LX மாடலில் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கிற்க்கு பதிலாக டிரம் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது ஜம்ப் இருக்கை வரிசையை இழந்துள்ளது.
டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விலை விபரம் (ex-showroom chennai)
சஃபாரி ஸ்ட்ராம் LX –ரூ.9.98 லட்சம்
சஃபாரி ஸ்ட்ராம் EX — ரூ.11.64 லட்சம்
சஃபாரி ஸ்ட்ராம் VX — ரூ.13.20 லட்சம்
சஃபாரி ஸ்ட்ராம் VX (4X4) — ரூ.14.55 லட்சம்
2015 Tata Safari Storm Facelift Launched price from at Rs.9.98 lakhs.