விஸ்டாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவத்தினை கொண்டுள்ளது. முகப்பு பம்பர் , கிரில் சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ளது. மேலும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. செஸ்ட் காரில் பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன ஆனால் போல்ட் காரில் அவை இல்லை.
செஸ்ட் காரின் சிறப்பு என்னவென்றால் கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல் மூலம் கியர் லிவரினை மாற்றி இயக்கி கொள்ளமுடியும். இதனை டாடா ஃஎப்-ட்ரானிக் நுட்பம் என பெயரிட்டுள்ளது.
செஸ்ட் மற்றும் போல்ட் காரில் புதிய ரெவர்டான் 1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
செஸ்ட் மற்றும் போல்டில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் வசதியினை கொண்டுள்ளது. மேலும் நவீன வசதிகள் கொண்ட தொடுதிரை தகவமைப்பினை கொண்டுள்ளது. இவ்வமைப்பில் மேப்மை இந்தியா வழிகாட்டியினை பெற்றுள்ளது.
போல்ட் மற்றும் செஸ்ட் இவ்வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.