அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்சின் டியாகோ ஏஎம்டி காரின் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இரு வேரியன்ட்களை டியாகோ பெற்றிருக்கும் என தெரிகின்றது.
டியோகா ஏஎம்டி
பெட்ரோல் மற்றும் டீசல் என இருஎஞ்சின் ஆப்ஷன்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் பெட்ரோல் மாடலின் வேரியன்ட் விபரங்கள் மட்டுமே கசிந்துள்ளது. டீசல் மாடலில் தாமதமாகவோ அல்லது இதனுடனே டியாகோ டீசல் ஏஎம்டி காரும் விற்பனைக்கு வரலாம். டாடாவின் ஸெஸ்ட் , நானோ கார்களை தொடர்ந்து மூன்றாவது ஏஎம்டி பொருத்தப்பட்ட மாடலாக டியோகோ வரவுள்ளது.
1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் வாயிலாக 84 பிஎச்பி பவருடன், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரவல்லதாக உள்ள நிலையில் புதிதாக வரவுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் கூடுதலாக இருக்கும்.
டாப் வேரியன்ட்களான XT மற்றும் XZ களில் மட்டுமே கிடைக்க உள்ள ஏஎம்டி சாதரன மாடலை விட கூடுதலான விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் அடுத்த சில வாரங்களில் கைட்5 என அழைக்கப்பட்ட டாடா டிகோர் செடான் கார் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.