பிரபலமான தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் காரில் லைவ் ஃபார் மோர் எடிசன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தயாரிப்பு கார்களுக்கு கூடுதல் துனைகருவிகள் இலவசமாக கிடைக்கும்.
க்விட் 0.8 லி மற்றும் 1.0 லி எஞ்சின் பொருத்தப்பட்ட இரு மாடல்களிலும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்சில் கிடைக்க உள்ள லைவ் ஃபார் மோர் பதிப்பில் ஸ்பாய்லர் , ரூஃப் ரெயில்கள் , முன்பக்க கிரில் போன்றவற்றில் பாடி ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இன்டிரியரில் சிவப்பு அசென்ட்ஸ், இரு வண்ண கலவை ஸ்டீயரிங் ,டேஸ்போர்டு போன்றவற்றை பெற்றுள்ளது.
க்விட் எஞ்சின் விபரம்
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.
54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
க்விட் ஏஎம்டி
67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe ( Smart Control efficiency- SCe) பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ரெனோ க்விட் லைவ் ஃபார் மோர் ஆரம்ப விலை ரூ.2.93 லட்சம் (எக்ஸ்ஷோரூம் மும்பை )
க்விட் சிறப்பு எடிசன் படங்கள்