கேள்வி பதில்
கேள்வி பதில் பக்கத்தின் முதல் கேள்வி நண்பர் பன்னிர்செல்வம் அவர்கள் அனுப்பி உள்ளார்.
வணக்கம்
2010 ஆம் ஆண்டு கார் வாங்கினேன். அந்த கார் ஆனது தற்சமயம் 50000km கடந்து உள்ளது. பயணம் மேற்கொண்டு இருந்த போது திருவான்மியூர் அருகில் திடிரேன தீ பற்றி பாட்டரி(battery) , டுர்போ சார்ஜர் (turbo chargar ) மற்றும் சில பாகங்கள் எரிந்து விட்டது. இது பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நஷ்ட ஈடுகேட்ட பொழுது அவர்கள் இது விபத்து அல்ல தீ பிடித்து உள்ளது விபத்து ஏற்பட்டு தீ பிடித்து இருந்தால் மட்டும்தான் நாங்கள் பொறுப்பு என்று கூறினர்.இது தயாரிப்பு குறை நாங்கள் பொறுப்பு அல்ல என்றும் கூறினர். நான் சர்வீஸ் டீலர்யிடம் கேட்ட பொழுது அவர்களும் பழுது நீக்கி தர மறுத்து விட்டனர். நான் என்ன செய்வது உதவி செய்யுங்கள்.
வணக்கம் நண்பரே
கார் வாங்கி இரண்டு வருடங்கள் மேலும் 50000 km கடந்து உள்ளது என்றும் கூறி உள்ளார். முறையான தொடர் பராமரிப்பு மேற்க் கொண்டு இருப்பிர்கள்.
இந்த பிரச்சனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தார் பொறுப்பு ஏற்கவில்லை என சொன்னிர்கள். இந்திய இன்சூரன்ஸ் சட்ட விதிப்படி உங்களுடையது தீ விபத்தாக ஏற்று கொள்ளமாட்டார்கள்.
காரணம் garage போன்ற இடங்களில் தீ பற்றினால் மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பு ஏற்கும். மேலும் உங்களுடையது ஒரு குறிபிட்ட பாகம் என்பதால் அது அவர்கள் நஷ்ட ஈடு தர வாய்ப்பு இல்லை
காரணம் garage போன்ற இடங்களில் தீ பற்றினால் மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பு ஏற்கும். மேலும் உங்களுடையது ஒரு குறிபிட்ட பாகம் என்பதால் அது அவர்கள் நஷ்ட ஈடு தர வாய்ப்பு இல்லை
நீங்கள் உங்களுடைய டீலரை அணுகியும் பயன் கிடைக்கவில்லை என தெரிவித்து உள்ளீர்கள். அவர்களிடம் நீங்கள் சரியான விளக்கத்தை அதாவது எதனால் அவர்கள் பழுது நீக்கி தர மறுத்து உள்ளனர் என்பதை தெளிவாக அவர்களிடம் பெற்று கொள்ளுங்கள்.
மேலும் பழுது ஏற்பட்டு தீ பற்ற காரணம் என்ன என்பதனை ஒரு அனுபவம் (MECHANIC) நிறைந்த நபரிடம் விளக்கம் பெறுங்கள்.
இது உங்கள் கவன குறைவாக கூட இருக்கலாம் அதாவது முறையான பாட்டரி பராமரிப்பு இல்லாமலும் இருந்தாலும் ஏற்பட வாயப்பு உண்டு.
மேலும் பழுது ஏற்பட்டு தீ பற்ற காரணம் என்ன என்பதனை ஒரு அனுபவம் (MECHANIC) நிறைந்த நபரிடம் விளக்கம் பெறுங்கள்.
இது உங்கள் கவன குறைவாக கூட இருக்கலாம் அதாவது முறையான பாட்டரி பராமரிப்பு இல்லாமலும் இருந்தாலும் ஏற்பட வாயப்பு உண்டு.
இது குறித்து உங்களுடைய கார் நிறுவனத்தாரிடம் விளக்கம் கேளுங்கள் அவர்கள் நிச்சயம் சரியான விளக்கத்தை தருவார்கள்.
அவர்களும் உங்களுக்கு அளித்த விளக்கம் தெளிவாக இல்லை என்றால் கன்சூமர் கோர்ட்டில் (consumer court ) புகார் கொடுங்கள்.
உங்கள் தரப்பு கருத்துகள் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் டீலர் மற்றும் கம்பெனி அளித்த விளக்கம் போன்றவற்றை xerox வைத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கார் பெயர் கொடுத்து இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ள முகவரி தந்து இருக்கலாம் .
பின் குறிப்பு:
உலகின் மிக குறைந்த விலை காரில் இது போன்று ஸ்டார்டிங் மோட்டார் (starting motor) பிரச்சனை காரணமாகதான் தீ பற்றி எரிந்து உள்ளது ஆனால் தற்சமயம் வருகிற அந்த காரில் பிரச்சனை சரி செய்து விட்டார்கள்.