இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் அங்கமான சொகுசு லெக்சஸ் பிராண்டில் லெக்சஸ் ES 300h ஹைபிரிட் சொகுசு செடான் கார் ரூ.55.27 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
லெக்சஸ் ES 300h
- ரூ.55.27 லட்சத்தில் லெக்சஸ் ES 300h கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காரை அடிப்படையாக கொண்டு லெக்சஸ் ரக மாடலாகும்.
- இந்தியாவில் ஹைபிரிட் ரக லெக்சஸ் இஎஸ் 300h மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லெக்சஸ் கார்களுக்கே உரித்தான தனத்தன்மைகளை கொண்ட சொகுசு அம்சங்கள் மற்றும் தோற்ற வசதிகளை பெற்றிருக்கின்ற இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இரண்டுமே இணைந்து அதிகபட்சமாக 200 ஹெச்பி ஆற்றலுடன் 213 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் எலக்ட்ரானிக் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
லெக்சஸ் காரின் பாரம்பரிய கிரில் அமைப்பினை பெற்று விளங்குகின்ற இந்த மாடலின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் கூடுதலாக பகலில் ஒளிரும் எல்இடி விளக்குகளை பெற்று விளங்குகின்றது.
10 காற்றுப்பைகளுடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ள லெக்சஸ் ES 300h காரில் லெக்சஸ் பாதுகாப்பு அமைப்பு , முன்பக்க மோதலை எச்சரிக்கும் கருவி , லேன் மாறுதலை எச்சரிக்கும் கருவி , ஸ்டீயரியங் அசிஸ்ட் , இன்டலிஜென்ட் ஹை பீம் மற்றும் ஹை-ஸ்பீடு ரேடார் க்ரூஸர் கன்ட்ரோல் போன் வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.
இந்த காரின் போட்டியாளர்கள் பென்ஸ் E-Class, ஆடி A7, பிஎம்டபிள்யூ 5 Series மற்றும்வால்வோ S90 போன்ற மாடல்களாகும். லெக்சஸ் இஎஸ் 300எச் கார் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
மேலும் படிக்கலாமா …! லெக்சஸ் கார் செய்திகள் மற்றும் விபரம் ..!