இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம் எக்ஸ்-ஷோரூம் விலையில் 6 % 12% வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு MU-X விலையில் 12 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இசுசூ கார்கள்
இசுசூ நிறுவனத்தின் MU-X எஸ்யூவி மாடலின் விலை ரூ. 22,38,358 எக்ஸ்ஷோரூம் சென்னை விலையாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வரி வதிப்பை விட 8 % குறைப்பாகும். சராசரி நாடு முழுவதும் 6 % முதல் 12 % வரை 7 இருக்கை பெற்ற MU-X எஸ்யூவி விலை குறைக்கப்பட்டுள்ளது.
அட்வென்ச்சர் ரக பிக்கப் டிரக் மாடலின் விலையை 6 சதவிகிதம் வரை குறைத்துள்ளதால் இசுசூ D-MAX V-Cross தற்போது ரூ. 12,67,111 சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
வர்த்தக ரீதியான பிக்கப் டிரக மாடல்களான D-MAX S-CAB மற்றும் D-MAX போன்றவற்றின் விலையை குறைத்துள்ளதால் D-MAX S-CAB ரூ. 801,418 மற்றும் D-MAX ரூ. 681,004 என்ற விலையில் எக்ஸ்ஷோரூம் சென்னையில் விற்பனை செய்யபட உள்ளது.