ஆடி ஏ6 செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் சில புதிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
ஆடி ஏ6 தோற்றத்தில் புதிய எல்இடி மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகள் , முன் மற்றும் பின் பம்பர் , பக்கவாட்டு ஸ்க்ர்ட்ஸ் ,டெயில் விளக்குகள் , டைனமிக் டர்ன் இன்டிக்கேட்டர் மற்றும் புகைப்போக்கி போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் உடன் இணைந்த குரல் வழி கட்டுப்பாடு , பின்புற இருக்கை பயணிகளுக்காக ரிமோட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
180எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TFSI என்ஜின் மற்றும் 174 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.