ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் உற்பத்தி நிலையில் 12 நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் உள்ள பல அம்சங்கள் வெளிவந்துள்ளன. ஈக்கோஸ்போர்ட் கார் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் 4 மாறுபட்டவை(Varient) உள்ளன. மூன்று விதமான எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின்
1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்
1.5 லிட்டர் டீசல் எஞ்சின்
1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின்கள் தற்பொழுது விற்பனையில் உள்ள ஃபியஸ்டா காரின் எஞ்சின் ஆகும். அனைத்து எஞ்சினிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஆப்ஷனாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் வாய்ஸ் மூலம் உங்கள் அலைபேசியின் குறுஞ்செய்திகளை படிக்கலாம், மற்றவர்களை அழைக்கலாம், பாடல்களை தேர்வுசெய்யலாம். இந்த நுட்பம் பூளுடுத் மூலம் இணைத்துக்கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இனைந்து உருவாக்கியுள்ளனர்.
100 நபர்களுக்கு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வெல்ல ஒரு வாய்ப்பு ஆன்லைன் மூலமாக இணைய முகவரி https://www.ecosportdiscoveries.co.in
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஜூன் மாதம் வெளிவரலாம்.