ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டி1என் (T1N) பிளாட்ஃபாரமில் பிஎஸ் 6 டீசல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் வேன் மாடலாகவும் அறிமுகப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வேன் அடுத்த தலைமுறை பயன்பாட்டிற்கான வாகனமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த தலைமுறை பகிர்வு மொபைலிட்டி வாகனமாக உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ஐசி என்ஜின் மற்றும் மின்சார வாகனமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட முதல் மாடலாகும். இந்த மாடலை பொறுத்தவரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில் உருவாக்கியுள்ள இந்த வேன் உற்பத்தி நிலையை எட்டியுள்ளது.
டி1என் மாடலை பொறுத்தவரை மிகவும் சக்திவாய்ந்த பிஎஸ் 6 டீசல் என்ஜின் பொருத்தப்படும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்கும், அதேவேளை இந்த என்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷனும் வரவுள்ளது. இந்த இரண்டை தவிர அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் பயன்பாட்டு பவர் ட்ரெயின் ஆப்ஷனையும் பெற உள்ளது.
இந்த வேன் பிரிவில் டி 1 என் பல்வேறு பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெறும் முதல் வாகனம், ஓட்டுநர் மற்றும் இணை ஓட்டுநருக்கான ஏர்பேக்குகள் மற்றும் ரோல்ஓவர் ஆப்ஷனை வழங்குகிறது. கூடுதலாக, டி1என் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் ஏபிஎஸ், ஈபிடி மற்றும் ஈஎஸ்பி உடன் வருகிறது. இந்த தளம் இரண்டு பாக்ஸ் கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரிவில் முதல் முறையாக இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷனை பெறுகின்றது.
இந்த புதிய பிளாட்ஃபாரம் சோதனைக்கு மற்றும் தரம் சரிபார்ப்புக்கு உட்பட்டுள்ள நிலையில், பிதாம்பூரில் உள்ள ரோபோட்டிக் மற்றும் லேசர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ளது. டி1என் அடிப்படையிலான வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்படவும், மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.