ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆஃப்ரோடு மற்றும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம் 411 அடிப்படையில் ஸ்கிராம் 440 மாடலின் ஆன் ரோடு விலை, சிறப்புகள், மைலேஜ், நிறங்கள் மற்றும் நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
Royal Enfield Scram 440
முன்பாக 411சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்த ஹிமாலயன் மற்றும் ஸ்கிராம் என இரு மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஹிமாலயன் 452சிசி செர்பா எஞ்சினுக்கு மாற்றப்பட்டிருக்கின்ற நிலையில், ஸ்கிராம் 443சிசி LS எஞ்சினுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கியர்பாக்ஸ், கியர் விகிதம் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசப்படுகின்றது.
முந்தைய 411சிசி கூடுதலாக எஞ்சின் போர் அளவினை 3mm உயர்த்திய காரணத்தால் LS 443cc எஞ்சினாக மாறி உள்ள புதிய ஸ்கிராம் 440 அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது. தற்பொழுது 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ஹாஃப் டூப்ளெக்ஸ் ஸ்பிளிட் கார்டிள் ஃபிரேம் பெற்ற ஸ்கிராம் 440 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,165mm அகலம் 840mm மற்றும் உயரம் 1,165mm, அடுத்து வீல்பேஸ் 1,460mm மற்றும் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 187 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 795mm ஆக உள்ளது.
முந்தைய மாடல் ஸ்போக் வீல் ட்யூப் டயர் மட்டும் பெற்றிருந்த நிலையில், தற்பொழுது அலாய் வீல் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட ஆரம்ப நிலை வேரியண்ட் ஃபோர்ஸ் ப்ளூ, ஃபோர்ஸ் டீல், ஃபோர்ஸ் கிரே மற்றும் ஸ்போக் வீல் பெற்ற மாடல் ட்ரெயில் ப்ளூ, ட்ரெயில் க்ரீன் என மொத்தமாக 5 நிறங்களை பெற்றிருக்கின்றது.
ஸ்கிராம் 440 மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் 41 டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்புற டயரில் 100/90 R19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 120/90 R17 அங்குல வீல் பெற்று பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ள மாடலில் செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரை பெறுகின்ற ஸ்கிராம் 440 பைக்கில் டிரிப்பர் நேவிகேஷனை ஆப்ஷனல் ஆக்செரீஸ் ஆக சேர்த்துக் கொள்ளலாம். யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றது.
- Force Blue, Teal, Grey – ₹ 2,08,000
- Trial Blue, Green – ₹ 2,15,000
(Ex-showroom)
Royal Enfield Scram 440 on-Road Price in Tamil Nadu
2025 ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பைக்கின் ஆன்ரோடு விலைஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Force Blue, Teal, Grey – ₹ 2,52,307
- Trial Blue, Green – ₹ 2,62,167
(All Price on-road Tamil Nadu)
- Force Blue, Teal, Grey – ₹ 2,32,654
- Trial Blue, Green – ₹ 2,38,675
(All Price on-road Pondicherry)
2025 ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke, SOHC |
Bore & Stroke | 81 mm x 86 mm |
Displacement (cc) | 443 cc |
Compression ratio | 9.5:1 |
அதிகபட்ச பவர் | 25.4 ps at 6250 rpm |
அதிகபட்ச டார்க் | 34 Nm at 4000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (eFI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ஹாஃப் டூப்ளெக்ஸ் ஸ்பிளிட் கார்டிள் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | 41 மிமீ டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோ ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 300 mm |
பின்புறம் | டிஸ்க் 240 mm ( ABS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக்/அலாய் |
முன்புற டயர் | 100/90 R19 ட்யூப் / ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 120/90 R17 ட்யூப் / ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V-8Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2165 மிமீ |
அகலம் | 840 மிமீ |
உயரம் | 1165 மிமீ |
வீல்பேஸ் | 1510 மிமீ |
இருக்கை உயரம் | 795 மிமீ |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 200 மிமீ |
எரிபொருள் கொள்ளளவு | 15 லிட்டர் |
எடை (Kerb) | 187 kg |
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 நிறங்கள்
ஸ்கிராம் 440ல் ஃபோர்ஸ் ப்ளூ, ஃபோர்ஸ் டீல், ஃபோர்ஸ் கிரே ஸ்போக் வீல் பெற்ற ட்ரெயில் ப்ளூ, ட்ரெயில் க்ரீன் என மொத்தமாக 5 நிறங்கள் உள்ளது.
Royal Enfield Scram 440 rivals
ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 440க்கு போட்டியாக யெஸ்டி ஸ்கிராம்பளர், டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்ளும் நிலையில் 440சிசி ஹீரோ மேவ்ரிக் மாடலும் உள்ளது.
Faqs about Royal Enfield Scram 440
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 எஞ்சின் விபரம் ?
ஸ்கிராம் 443cc அதிகபட்சமாக 25.4hp பவரை 6,250rpm-லும், 34Nm டார்க் 4,000rpmல் வழங்குகின்றது. தற்பொழுது 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன் ரோடு விலை எவ்வளவு ?
Scram 440 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ. 2.53 லட்சம் முதல் ரூ.2.63 லட்சத்திற்குள் அமைந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 வேரியண்ட் விபரம் ?
ஸ்போக் வீல் கொண்ட மாடல் ட்ரெயில் வேரியண்ட் மற்றும் அலாய் வீல் ட்யூப்லெஸ் டயர் பெற்ற மாடல் ஃபோர்ஸ் வேரியண்ட் ஸ்கிராம் 440 பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிரம் 440 மைலேஜ் எவ்வளவு ?
ராயல் என்ஃபீல்டின் ஸ்கிரம் 440 மைலேஜ் லிட்டருக்கு 30-32 கிமீ வரை கிடைக்கும்.
ஸ்கிராம் 440 போட்டியாளர்கள் யார் ?
யெஸ்டி ஸ்கிராம்பளர், டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X போன்ற மாடலுடன் 440சிசி ஹீரோ மேவ்ரிக் மாடலும் உள்ளது.