ராயல் என்ஃபீல்டின் பிரபலமான கிளாசிக் பைக்கின் அடிப்படையிலான பாபர் ஸ்டைல் Goan கிளாசிக் 350 பைக்கின் ஆன்-ரோடு விலை, சிறப்புகள், மைலேஜ், நிறங்கள் மற்றும் நுட்ப விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Royal Enfield Goan Classic 350
பாபர் ஸ்டைல் என்பது ஒரிஜனல் பைக்கிலிருந்து பாகங்களை குறைத்து அல்லது மாறுதல்களை மேற்கொண்டு நேர்த்தியான வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் மாடல்களுக்கு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் J-series 350 சிசி இன்ஜின் பெற்ற பாபர் ஸ்டைல் மாடலாக கோன் கிளாசிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் ஜாவா 42 பாபர் மற்றும் பெராக் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன. அடிப்படையில் கிளாசிக் 350 பைக்கின் பல்வேறு அம்சங்கள் எஞ்சின் உட்பட அனைத்தும் பகிர்ந்து கொள்கின்றது.
கோவான் கிளாசிக் 350 பைக்கில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ட்வீன் டவுன் டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள கோன் கிளாசிக் 350 பைக்கின் பரிமாணங்கள் 2130mm நீளம், 825mm அகலம் மற்றும் 1,200mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1400mm வீல்பேஸ் பெற்று 170mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 13 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் கலன் கொண்ட மாடலின் எடை 197 கிலோ கிராம் ஆகும்.
இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் ஸ்போக்டூ வீல் பெற்றாலும் வெள்ளை நிற வால் ட்யூப்லெஸ் டயருடன் வந்துள்ளது. முன்புறம் 100/90-19 57P மற்றும் பின்புறத்தில் 130/90-16 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கிடைக்கின்றது.
குறிப்பாக கிளாசிக் 350லிருந்து அடிப்படையான எல்இடி ஹெட்லைட் உட்பட எல்இடி பைலட் விளக்கு,அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றுடன் யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை கொண்டிருக்கின்றது. இந்த பைக்கில் 4 விதமான நிறங்களை உள்ளது.
Goan Classic 350 ex-showroom price
- Purple Haze, Shack Black – ₹ 2,35,000
- Rave Red, Trip Teal – ₹ 2,38,000
2025 ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 நுட்பவிபரங்கள்
Royal Enfield Goan Classic 350 | |
என்ஜின் | |
வகை | Air Cooled, SOHC, 4 stroke , 2 valve |
Bore & Stroke | 75 x 85.8mm |
Displacement (cc) | 349 cc |
Compression ratio | 9.5:1 |
அதிகபட்ச பவர் | 20.2 bhp at 6,100 rpm |
அதிகபட்ச டார்க் | 27 Nm at 4,000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (EFI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | ட்வீன் ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | 300 mm டிஸ்க் (ABS) |
பின்புறம் | 270 mm டிஸ்க் |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக் |
முன்புற டயர் | 100/90 -19 (63P) ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 120/80 -16 (74P) ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 8.0Ah |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2,130 mm |
அகலம் | 825 mm |
உயரம் | 1,200 mm |
வீல்பேஸ் | 1,400 mm |
இருக்கை உயரம் | 750 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 170 mm |
எரிபொருள் கொள்ளளவு | 13 litres |
எடை (Kerb) | 197 Kg |
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 நிறங்கள்
மிக கலர்ஃபுல்லான பாடி கிராபிக்ஸ் உடன் கஸ்டமைஸ் பைக்குகளுக்கு இணையாக ரேவ் ரெட், டிரிப் டீல் என இரண்டு டூயல் டோன் நிறங்களும், இரண்டு சிங்கிள் டோன் பர்பிள் ஹெஸ், மற்றும் ஷேக் பிளாக் என மொத்தமாக 4 நிறங்கள் உள்ளன.
Royal Enfield Goan Classic 350 on-Road Price in Tamil Nadu
2025 ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தின் விலையும் உள்ளது. ஆன்-ரோடு விலை டீலர்கள் மற்றும் கூடுதல் ஆக்செரீஸ் பொறுத்து மாறுபடும்.
- Purple Haze, Shack Black – ₹ 2,75,591
- Rave Red, Trip Teal – ₹ 2,79,176
(All Price on-road Tamil Nadu)
- Purple Haze, Shack Black – ₹ 2,50,213
- Rave Red, Trip Teal – ₹ 2,53,321
(All Price on-road Pondicherry)
Royal Enfield Goan Classic 350 rivals
கோன் கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக பாபர் ஸ்டைலில் உள்ள ஜாவா 42 பாபர், ஜாவா பெராக் என இரு மாடல்களும் எதிர்கொள்ளுகின்றது.
Faqs about Royal Enfield Goan Classic 350
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கின் ஆன்ரோடு விலை விபரம்?
ராயல் என்ஃபீல்டு Goan Classic 350 ஆன் ரோடு விலை ரூ.2.76 லட்சம் - ரூ.2.79 லட்சம் வரை கிடைக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 என்ஜின் விபரம் ?
அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன் 27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்சினை கோவான் கிளாசிக் 350 பைக் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
பாபர் ஸ்டைலில் உள்ள ஜாவா 42 பாபர், ஜாவா பெராக் என இரு மாடல்களையும் கோன் கிளாசிக் 350 எதிர்கொள்ளுகின்றது.
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
கோவான் கிளாசிக் 350 பைக்கின் சராசரி மைலேஜ் 27-31KMPL ஆகும்.
ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 வேரியண்ட் விபரம் ?
Rave Red, Trip Teal என டூயல் டோன் பெற்றுள்ள மாடல்கள் இரண்டு நிறங்களிலும், ஒற்றை டோன் பெற்ற மாடல்கள் Purple Haze, Shack Black என இரண்டு நிறத்தில் உள்ளது.
Royal Enfield Goan Classic 350 Photo gallery