Ola Electric

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ola s1 pro plus front

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Gen-3 ஸ்கூட்டர் வரிசையில் வந்துள்ள 2025 ஆம் ஆண்டிற்கான S1 Pro+ வரிசையில் உள்ள 5.3Kwh, 4Kwh என இரண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Ola S1 Pro+

மூன்றாவது தலைமுறை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் முக்கிய மாற்றமாக செயின் டிரைவ், மேம்படுத்தப்பட்ட Move OS5, பிரேக் பை வயர் டெக்னாலஜி மூலம் இயங்கும் டூயல் ஏபிஎஸ் கொண்டுள்ள எஸ்1 புரோ+ மாடலின் 5.3Kwh மாடலில் 4680 பாரத் பேட்டரி செல் பொருத்தப்பட்டுள்ளது. 750 வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

0-40 கிமீ வேகத்தை 2.3 விநாடிகளில் எட்டும் S1 Pro+ 4Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 13KW (17.4hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 128 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 242 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 4 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 190-200 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 4.50 மணி நேரம் போதுமானதாகும்.

0-40 கிமீ வேகத்தை 2.1 விநாடிகளில் எட்டுகின்ற S1 Pro+ Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 13KW (17.4hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 141 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 320 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 4 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 250-260 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 7 மணி நேரம் போதுமானதாகும்.

Ola S1 Pro+ S1 Pro+ 4kwh S1 Pro+ 5.3kwh
மோட்டார் வகை Mid-drive mid-drive
பேட்டரி 4Kwh 5.3kwh
பவர் 13kW 13kW
டார்க்
ரேஞ்சு (IDC) 242 Km 320 Km
ரைடிங் ரேஞ்சு 200Km 280 Km
அதிகபட்ச வேகம் 128 Kmph 141 Kmph
சார்ஜிங் நேரம் (0-100%) 6 hrs 8 hrs 40 mins
ரைடிங் மோடு Hyper, Sports,

Normal & Eco

Hyper, Sports,

Normal & Eco

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில்  முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பெற்று ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று 34 லிட்டர் பூட் வசதியுடன், 1899 மிமீ நீளம், 850 மிமீ அகலம், 1297 மிமீ உயரத்துடன் 160மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1359 மிமீ வீல்பேஸ் பெற்று 110/70-12 மற்றும் பின்புறத்தில் 110/70-12 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , கால், எஸ்எம்எஸ் அலர்ட், ரிவர்ஸ் மோடு, ரோடு டிரிப், மல்டி மோடு டிராக்‌ஷன் வசதி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டு அல்லது 1,25,000 கிமீ வரை பெற ரூ.14,999 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

  • Ola S1 Pro+ 4kWh 1,54,999
  • Ola S1 Pro+ 5.3kWh 1,69,999

(ex-showroom)

2025 Ola S1 Pro+ electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஓலா எஸ் 1 புரோ பிளஸ் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ola S1 Pro+ 4kWh 1,75,654
  • Ola S1 Pro+ 5.3kWh 1,91,054

(All Price on-road Tamil Nadu)

  • Ola S1 Pro+ 4kWh 1,73,078
  • Ola S1 Pro+ 5.3kWh 1,89,087

(All Price on-road Pondicherry)

2025 ஓலா எஸ்1 புரோ+ நுட்பவிபரங்கள்

Ola S1 Pro+ Specs 4kwh/5.3kwh
மோட்டார்
வகை எலெக்ட்ரிக்
மோட்டார் வகை மிட் டிரைவ் IPM மோட்டார்
பேட்டரி 4kwh/5.3kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 128 Km/h / 141km/h
அதிகபட்ச பவர் 13kw
அதிகபட்ச டார்க்
அதிகபட்ச ரேஞ்சு 242/320 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 6 மணி நேரம் (0-100%)/8.40 மணி நேரம் (0-100%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Hyper, Sports, Normal & Eco
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க்
பின்புறம் டிஸ்க் (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 110/70-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/70-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை Portable 750W
கிளஸ்ட்டர் 7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 1,899 mm
அகலம் 850 mm
உயரம் 1297 mm
வீல்பேஸ் 1359 mm
இருக்கை உயரம் 791 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 160 mm
பூட் கொள்ளளவு 34 Litre
எடை (Kerb) 118 kg

ஓலா எஸ்1 புரோ+ ஸ்கூட்டரின் நிறங்கள்

சிவப்பு,  வெள்ளை, சில்வர், ஜெட் கருப்பு, ஸ்டெல்லர் நீலம், மிட்நைட் நீலம் என 6 விதமான நிறங்களை எஸ்1 புரோ பிளஸ் மின்சார ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

Ola S1 Pro+ Rivals

டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேத்தக், ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Faq ஓலா எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா S1 Pro+ ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஓலா S1 Pro+ மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.76 லட்சம் முதல் ரூ.1.91 லட்சம் வரை அமைந்தள்ளது.

ஓலா S1 புரோ+ சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

S1 புரோ+ இ-ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் 0-100% பெற 4kwh - 6 மணி நேரம், 5.3 kwh - 8.40 மணி நேரம்

ஓலா S1 புரோ+ போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா, ஏதெர் 450, பஜாஜ் சேத்தக், ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Share
Published by
MR.Durai