கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ktm rc 160 launched

இந்தியாவில் பிரசத்தி பெற்ற கேடிஎம் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற RC 160 ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளின் எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

கேடிஎம் RC 160 எஞ்சின்

சமீபத்தில் வந்த 160 டியூக்கில் உள்ள எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஆர்சி-யில் 164.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

KTM RC 160 On-road Price

RC வரிசையில் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ள 160 ஆர்சி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,85,000 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் கேடிஎம் RC 160 பைக் ஆன்-ரோடு விலை ரூ.2,26,165 வரை அமைந்துள்ளது. . புதுச்சேரி ஆன்ரோடு விலை ரூ.2,06,986 ஆகும்.

Ex-showroom on-road
KTM RC 160 ₹ 1,85,000 ₹ 2,26,165

மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் 17 அங்குல வீல் பெற்று ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேமினை பெற்றிருக்கும்.

5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எரிபொருள் இருப்பு, சராசரி மைலேஜ் அடிப்படையான பல்வேறு அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பின் கேடிஎம் கனெக்ட் வசதிகளை கொண்டு முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் 320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ பின்புற டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS கொண்டுள்ளது. சூப்பர் மோட்டோ, ஆஃப் ரோடு ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

கேடிஎம் ஆர்சி 160 நுட்பவிபரங்கள்

வகை விவரம்
எஞ்சின் 164.2cc, 1 சிலிண்டர், SOHC, லிக்விட் கூல்ட்
Bore x Stroke 66 mm X 48 mm
பவர் 19 PS @ 9500 rpm
டார்க் 15.5 Nm @ 7500 rpm
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
சஸ்பென்ஷன் முன் WP USD ஃபோர்க், பின் WP மோனோஷாக்
பிரேக்  320mm/ 230mm டிஸ்க் (ABS)
டயர்கள் 110/70 – 17 FR / 140/60 – 17
எரிபொருள் டாங் 10.1 லிட்டர்
எடை 147 கிலோ (Kerb Weight)
நீளம்xஅகலம்xஉயரம்
கிரவுண்ட் கிளியரண்ஸ் 174mm
டிஸ்பிளே 5″ எல்சிடி கன்னெக்ட் வசதியுடன்
ரைடிங் மோடுகள் Supermoto ABS
டாப் வேகம் 155கிமீ
விலை (எக்ஸ்-ஷோரூம்)

KTM RC 160 Duke Rivals

160cc சந்தையில் கிடைக்கின்ற யமஹா R15 V4 மாடலை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற டியூக்கிற்கு சவாலாக மற்ற மாடல்களான ஜிக்ஸர் SF போன்றவை உள்ளது.

Exit mobile version