Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
18 December 2025, 5:36 pm
in KTM bikes
0
ShareTweetSend

KTM 160 Duke onroad price

கேடிஎம் வெளியிட்டுள்ள ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய 160 டியூக் பைக்கின் எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

கேடிஎம் 160 டியூக் எஞ்சின்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 164.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38-40 கிமீ வரை கிடைக்கலாம்.

போட்டியாளர்களை விட மிக சிக சிறப்பான பவர் டூ எடை விகிதச்சாரத்தை பெற்றுள்ள 160 டியூக்கின் எடை 147 கிலோ கொண்டுள்ளது.

KTM 160 Duke On-road Price

டியூக் வரிசையில் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ள 160 டியூக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,70,663 ஆக உள்ளது. கூடுதலாக TFT கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்ட மாடல் விலை ரூ.1,78,654 ஆகும்.

தமிழ்நாட்டில் கேடிஎம் 160 டியூக் பைக் ஆன்-ரோடு விலை ரூ.2,05,765 முதல் ரூ.2.13,460 வரை அமைந்துள்ளது. . புதுச்சேரி ஆன்ரோடு விலை ரூ.1,85,654 முதல் ரூ.1,94,087 ஆகும்.

Ex-showroomon-road
KTM 160 Duke₹ 1,70,663₹ 2,05,765
KTM 160 Duke TFT₹ 1,78,654₹ 2,14,460

17 அங்குல வீல் பெற்று ஸ்டீல் டெர்லிஸ் சேஸை பெற்ற இந்த மாடலில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி லைட்டிங் உடன் மிக நேர்த்தியாக எலக்ட்ரானிக் ஆரஞ்சு, அட்லாண்டிக் நீலம் மற்றும் சில்வர் மெட்டாலிக் மேட் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

KTM 160 டியூக்

5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு அடிப்படையான பல்வேறு அம்சங்களுடன் டர் பை டர்ன் நேவிகேஷன், கேடிஎம் கனெக்ட் வசதிகளை பெற்று முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில்  320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ பின்புற டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS கொண்டுள்ளது. சூப்பர் மோட்டோ, ஆஃப் ரோடு ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

கேடிஎம் 160 டியூக் நுட்பவிபரங்கள்

வகைவிவரம்
எஞ்சின்164.2cc, 1 சிலிண்டர், SOHC, லிக்விட் கூல்ட் 66 mm X 48 mm
Bore x Stroke66 mm X 48 mm
பவர்19 PS @ 9500 rpm
டார்க்15.5 Nm @ 7500 rpm
கியர்பாக்ஸ்6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
சஸ்பென்ஷன்முன் WP USD ஃபோர்க், பின் WP மோனோஷாக்
பிரேக் 320mm/ 230mm டிஸ்க் (ABS)
டயர்கள்110/70 – 17 FR / 140/60 – 17
எரிபொருள் டாங்10.1 லிட்டர்
எடை147 கிலோ (Kerb Weight)
நீளம்xஅகலம்xஉயரம்–
கிரவுண்ட் கிளியரண்ஸ்174mm
டிஸ்பிளே5″ எல்சிடி கன்னெக்ட் வசதியுடன்
ரைடிங் மோடுகள்Supermoto ABS
டாப் வேகம்155கிமீ
விலை (எக்ஸ்-ஷோரூம்)₹1.85 லட்சம்

KTM 160 Duke Rivals

160cc சந்தையில் கிடைக்கின்ற யமஹா MT-15 V2 மாடலை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற டியூக்கிற்கு சவாலாக மற்ற மாடல்களான அப்பாச்சி 160, பல்சர் 160, எக்ஸ்ட்ரீம் 160, ஜிக்ஸர் 155 உட்பட எஸ்பி 160 போன்றவை உள்ளது.

கேடிஎம் டியூக் 160 புகைப்படங்கள்

new ktm 160 duke bike
new ktm 160 duke
2025 ktm 160 duke action
2025 ktm 160 duke headlight
new ktm 160 duke first look
KTM 160 Duke onroad price

Last Updated – 18/12/2025

Related Motor News

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

யமஹா FZ ரேவ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

யமஹா XSR 155 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

Tags: 160cc BikesBike on-Road PriceKTM 160 Duke
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan