ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்காக CB350 H’Ness மாடல் விலை ரூ. 2,48,654 முதல் ரூ. 2,56,087 வரை அமைந்துள்ள நிலையில், சிபி 350 ஹைனெஸ் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Honda CB350 H’Ness
ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மாடலுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சிபி 350 ஹைனெஸ் பைக்கில் OBD-2B மேம்பாடு மற்றும் E20 ஆதரவினை பெற்ற 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5,500rpm-ல் 20.78hp பவர் மற்றும் 3000rpm-ல் 30 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
லாங் ரைடிங் சிறப்பான ரெட்ரோ தோற்ற பொலிவினை வெளிப்படுத்துகின்ற சிபி 350 ஹைனெசின் மைலேஜ் லிட்டருக்கு 32 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது.
ஹாஃப் டூயூப்லெஸ் கார்டிள் ஃபிரேம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள சிபி 350 பைக்கின் பரிமாணங்கள் 2163mm நீளம், 789mm அகலம் மற்றும் 1,107mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1441mm வீல்பேஸ் பெற்று 166mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 15 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் கலன் கொண்ட மாடலின் எடை 181 கிலோ ஆகும்.
முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றுள்ளது.
முன்புறத்தில் 19 அங்குல அலாய் வீல் உடன் 100/90-19M/C 57H ட்யூப்லெஸ் மற்றும் பின்புறத்தில் 130/70-18M/C 63H டயர் உள்ளது. DLX Pro க்ரோம், DLX Pro மற்றும் DLX என மூன்று வித வேரியண்ட் பெற்றுள்ளது.
ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.
- DLX – ₹ 2,11,322
- DLX Pro – ₹ 2,14,321
- DLX Pro Chrome – ₹ 2,16,322
- LEGACY EDITION – ₹ 2,17,177
(EX-Showroom)
Honda CB350 H’Ness on-Road Price in Tamil Nadu
ஹோண்டாவின் சிபி350 ஹைனெஸ் 2025 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- DLX – ₹ 2,48,654
- DLX Pro – ₹ 2,51,621
- DLX Pro Chrome – ₹ 2,54,890
- LEGACY EDITION – ₹ 2,56,087
(All Price on-road Tamil Nadu)
- DLX – ₹ 2,25,920
- DLX Pro – ₹ 2,28,497
- DLX Pro Chrome – ₹ 2,31,902
- LEGACY EDITION – ₹ 2,33,097
(All Price on-road Pondicherry)
2025 ஹோண்டா சிபி350 ஹைனெஸ் நுட்பவிபரங்கள்
Honda CB350 Hness | |
என்ஜின் | |
வகை | Air Cooled, 4 stroke |
Bore & Stroke | 70 x 90.5mm |
Displacement (cc) | 348.36 cc |
Compression ratio | – |
அதிகபட்ச பவர் | 20.78hp at 5,500rpm |
அதிகபட்ச டார்க் | 30 Nm at 3,000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (EFI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ஹாஃப் டூயூப்லெக்ஸ் கார்டிள் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | ட்வீன் ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | 310 mm டிஸ்க் (ABS) |
பின்புறம் | 240 mm டிஸ்க் |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 100/90-19M/C 57H ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 130/70-18M/C 63H ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 6.0Ah |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2,163 mm |
அகலம் | 789 mm |
உயரம் | 1,107 mm |
வீல்பேஸ் | 1,441 mm |
இருக்கை உயரம் | 800 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 166 mm |
எரிபொருள் கொள்ளளவு | 15 litres |
எடை (Kerb) | 181 Kg |
ஹோண்டா சிபி 350 ஹைனெஸ் நிறங்கள்
DLX Pro க்ரோம் டாப் வேரியண்டில் நீலம், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் டேங் பகுதியில் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு DLX Pro வேரியண்டில் கருப்பு, கிரே மற்றும் சிவப்பு, பேஸ் வேரியண்ட் DLX மாடலில் கருப்பு, கிரே என புதிய நிறங்களை பெற்றுள்ளது.
Honda CB350 H’ness rivals
350சிசி-450சிசி என்ஜின் பிரிவில் உள்ள கிளாசிக் 350, புல்லட் 350, ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, டிவிஎஸ் ரோனின் 225, ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Faqs about Honda CB350 H’ness
ஹோண்டா CB350 H'Ness பைக்கின் ஆன்-ரோடு விலை ?
ஹோண்டா CB350 H'Ness ஆன் ரோடு விலை ரூ.2.46 லட்சம் - ரூ.2.56 லட்சம் வரை கிடைக்கின்றது.
ஹோண்டா சிபி350 ஹைனெஸ் வேரியண்ட் விபரம் ?
DLX மாடலில் கிரே நிற பம்பர், கருப்பு நிற இருக்கை பெற்றுள்ளது. DLX Pro மாடலில் டூயல் டோன் நிறத்துடன் முன், பின் பம்பர் பைக்கின் நிறத்திலும், DLX Pro Chrome வேரியண்டில் பம்பர் க்ரோம் நிறத்துடன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.
ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்கின் என்ஜின் விபரம் ?
சிபி350 ஹைனெஸ் பைக்கில் 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் உள்ளது.
ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
புல்லட் 350, கிளாசிக் 350, ஜாவா 350, ஜாவா 42, டிரையம்ப் ஸ்பீடு 440, டிவிஎஸ் ரோனின், ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
ஹோண்டா சிபி350 ஹைனெஸ் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 28 கிமீ முதல் 30 கிமீ வழங்குகின்றது.