பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 125cc சந்தையில் ஸ்போர்டிவ் ரைடுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற 2025 பல்சர் N125 பைக் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2025 Bajaj Pulsar N125
துவக்கநிலை சந்தையில் ஸ்போர்ட்டிவ் அனுபவத்தினை பெறும் வகையில் இளம் வயதினருக்கு ஏற்ற மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் ஆட்டோவின் பல்சர் என்125 மாடலில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அமைப்புடன் 7 விதமான நிறங்கள் வழங்கப்பட்டு எல்இடி ப்ளூடூத் டிஸ்க் மற்றும் எல்இடி டிஸ்க் என இருவிதமான வேரியண்டை கொண்டதாக அமைந்துள்ளது.
E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் ISG உடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய 124.58cc என்ஜின் இரண்டு வால்வு அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
டைமன்ட் டைப் ஃபிரேம் கொண்டுள்ள பல்சர் என்125 பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த பைக்கின் பரிமாணங்களை வீல்பேஸ் 1 மிமீ பெற்று 198 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று இருக்கை நீளம் 715 மிமீ ஆகவும் 9.5 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 125 கிலோ எடை கொண்டது.
முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது பல்சர் N125 பைக் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக மட்டும் வருகிறது.
டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 80/100-17 மற்றும் பின்புறத்தில் 100/90-17 அல்லது 110/80-17 என இருவிதமான டயர் உள்ளது.
LED Disc மற்றும் LED Disc BT என இரண்டு வேரியண்டுக்கும் வித்தியாசங்களில் மிக முக்கியமானவை பாடி கிராபிக்ஸ், ISG என்ஜின் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்துடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி, குறுஞ்செய்திகளையும் தெரிந்து கொள்வதுடன் பின்புற 110/80-17 டயரை LED Disc BT பெற்றுள்ளது.
எல்இடி டிஸ்க் மாடலில் எளிமையான கிளஸ்ட்டரில் சிறிய டிஜிட்டல் எல்சிடி மட்டும் பெற்று நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் மாறுபடுகின்றது.
தமிழ்நாட்டில் பஜாஜ் பல்சர் N125 பைக் எக்ஸ்-ஷோரூம் விலை
- Pulsar N125 LED Disc Rs.96,986
- Pulsar N125 LED Disc BT Rs.98,707
பஜாஜ் பல்சர் என்125 நுட்பவிபரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 54mm x 54.5 mm |
Displacement (cc) | 124.58 cc |
Compression ratio | – |
அதிகபட்ச பவர் | 12 PS (8.82 kW) @ 8500 rpm |
அதிகபட்ச டார்க் | 11 Nm @ 6,000rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமன்ட் ஃபிரேம் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் டைப் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோஷாக் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 240 mm |
பின்புறம் | டிரம் 130 mm (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 80/100-17 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 110/80-17 / 100/90-17 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | – |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப்/கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | – |
அகலம் | – |
உயரம் | – |
வீல்பேஸ் | 1295 mm |
இருக்கை உயரம் | 795 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 198 mm |
எரிபொருள் கொள்ளளவு | 9.5 litres |
எடை (Kerb) | 125 kg (BT Disc) – 127.5 kg (Disc) |
பஜாஜ் பல்சர் என்125 நிறங்கள்
LED Disc வேரியண்டில் எளிமையான கிராபிக்ஸ் உடன் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு என நிறங்களும், LED Disc BT வேரியண்டில் சற்று மாறுபட்ட கிராபிக்ஸ் ஸ்டைல் உடன் கருப்பு நிறத்துடன் பர்பிள், கருப்பு நிறத்துடன் சிவப்பு, இறுதியாக கிரே நிறத்துடன் சிட்ரஸ் ரஷ் என மூன்று நிறங்கள் உள்ளது.
2025 Bajaj Pulsar N125 rivals
125சிசி சந்தையில் உள்ள பல்சர் 125, பல்சர் என்எஸ்125, ஃபீரிடம் 125 என தனது உடன் பிறந்த போட்டியாளர்களுடன் ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ கிளாமர் 125, இவற்றுடன் குடும்பங்களுக்கான மாடலாக உள்ள ஹோண்டா ஷைன் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் 125 ஆகியவற்றை பல்சர் N125 எதிர்கொள்ளுகின்றது.
2025 Bajaj Pulsar N125 on-Road Price in Tamil Nadu
2025 பஜாஜ் பல்சர் n125 160 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Pulsar N125 LED Disc Rs.1,13,940
- Pulsar N125 LED Disc BT Rs.1,17,379
(All Price On-road Tamil Nadu)
- Pulsar N125 LED Disc Rs.1,09,940
- Pulsar N125 LED Disc BT Rs.1,13,540
(All Price on-road Pondicherry)
Faqs About Bajaj Pulsar N125
பஜாஜ் பல்சர் என்125 என்ஜின் விபரம் ?
124.58cc என்ஜின் இரண்டு வால்வு அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்சர் என்125 பைக்கின் ஆன்-ரோடு விலை ?
பஜாஜின் பல்சர் N125 ஆன்-ரோடு விலை ரூ. 1.11 லட்சம் முதல் 1.16 லட்சம் வரை உள்ளது.
பல்சர் என்125 பைக்கின் மைலேஜ் விபரம் ?
பல்சர் என்125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 52 கிமீ வரை வழங்குகின்றது.
பல்சர் என்125 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
பல்சர் என்125 பைக்கிற்கு மாற்றாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா எஸ்பி 125 மற்றும் டிவிஎஸ் ரைடர், ஹீரோ கிளாமர் போன்ற மாடல்கள் உள்ளன.
பல்சர் N125 LED Disc மற்றும் LED Disc BT என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
இரு மாடல்களும் நிறம் மற்றும் பாடி கிராபிக்ஸ் வித்தியாசப்படும் நிலையில், LED Disc BT வேரியண்ட் அகலமான டயர், Integrated starter generator மற்றும் ப்ளூடுத் இணைப்பினை பெறுகின்றது.
2025 Bajaj Pulsar N125 Image Gallery
last onroad price updated – 16-11-2024