பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவிதமான வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், தொழில் நுட்பவிபரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
2024 Bajaj Chetak
ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பினை கொண்டுள்ள சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் தற்பொழுது அர்பேன் 2024 மற்றும் 2901 விற்பனையில் உள்ள நிலையில் பிரீமியம் 2024 வேரியண்ட் என மொத்தமாக 3 வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கின்றது.
2901 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.88Kwh லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டு ரேஞ்ச் 123 கிமீ ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ வெளிப்படுத்துகின்றது. ஆஃப் போர்டு சார்ஜர் கொண்டு 6 மணி நேரத்தில் 100 % சார்ஜிங் எட்ட இயலும். டெக்பேக் பெற்ற மாடலும் மணிக்கு 63 கிமீ மட்டுமே வேகத்தை பெற்றிருக்கும் ஆனால் குறைந்த கனெக்ட்டிவிட்டி வசதிகளை மட்டும் பெற்றிருக்கின்றது.
சேட்டக் பேட்டரி மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள BLDC வகை மோட்டாரிலிருந்து 3,800 W தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4,080 W பவர் வரை வெளிப்படுத்துகின்றது.
இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 2.9Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 4 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை தேவைப்படும். 650 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது. ( 800W சார்ஜருடன் வரும் 2023 பிரீமியம் மாடல் சார்ஜிங் நேரம் 3 மணி நேரம் 50 நிமிடம் ரேஞ்ச் 108 கிமீ) முழுமையாக சார்ஜ் செய்தால் IDC முறைப்படி 113 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கலாம். ஈக்கோ, ஸ்போர்ட் என இருவிதமான ரைடிங் மோடு உள்ளன.
புதிதாக வரவுள்ள பிரீமியம் 2024 வேரியண்ட் ஆனது 3.2kWh பேட்டரி பேக் பெற்று 126 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 73Km/hr ஆகும். அர்பேன் டெக்பேக் அல்லாத வேரியண்ட் மணிக்கு 63 கிமீ ஆகும்.
டியூப்லெர் ஸ்டீல் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சேட்டக் ஸ்கூட்டரில் முன்புறத்தில் ஒற்றை பக்க ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன், முன் சக்கரங்களின் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 பெற்று ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது.
அர்பேன் 2024 மாடலில் உள்ள எல்சிடி டிஸ்பிளே பெற்றுள்ளது ஆனால் பிரீமியம் மாடலில் புதிய 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும். மற்றபடி, டெக்பேக் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி பெற உள்ள டாப் வேரியண்ட் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இருவிதமான ரைடிங் மோடுகள் பெற்று ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் முழுமையான MyChetak ஆப் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை கட்டுப்பாடு, பயண விபரம், குறிப்பிட்ட எல்லையில் மட்டும் கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.
பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கிமீ பேட்டரி + மோட்டார் உத்தரவாதம் வழங்குகிறது.
- 2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,23,319
- 2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,30,001
- 2024 Bajaj Chetak premium – 1,47,243
- 2024 Bajaj Chetak premium Tecpac – ₹, 155,243
(EX-showroom Tamil Nadu)
பஜாஜ் சேட்டக் நுட்பவிபரங்கள்
Chetak Specs | Urbane 2024/ Premium 2024 |
மோட்டார் | |
வகை | ஏலக்ட்ரிக் |
மோட்டார் வகை | BLDC மோட்டார் |
பேட்டரி | 2.9Kwh/ 3.2 Kwh Lithium ion |
அதிகபட்ச வேகம் | 73 Km/h (63km/h w/o techpac) |
அதிகபட்ச பவர் | 4.0 KW Nominal/ 4.2 kw Peak |
அதிகபட்ச டார்க் | 16.2 Nm |
அதிகபட்ச ரேஞ்சு | 113 Km / 126Km per charge (IDC Claimed) |
சார்ஜிங் நேரம் | 4.50 மணி நேரம் (0-100%) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டியூப்லெர் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
ரைடிங் மோட் | Eco, Sports |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | ஒற்றைப் பக்க லிங்க் |
பின்பக்கம் | மோனோஷாக் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் |
பின்புறம் | டிரம் (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/100-12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
ஹெட்லைட் | எல்இடி |
சார்ஜர் வகை | Portable 650 kW/TBA |
கிளஸ்ட்டர் | LCD/5 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1860 mm |
அகலம் | 725 mm |
உயரம் | – |
வீல்பேஸ் | 1330 mm |
இருக்கை உயரம் | 760 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
பூட் கொள்ளளவு | 16 Litre |
எடை (Kerb) | 133 kg |
பஜாஜ் சேட்டக் நிறங்கள்
2024 பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு ஹேசல்நட், கருப்பு, கோரஸ் கிரே மற்றும் சைபர் வெள்ளை மற்றும் இன்டிகோ மெட்டாலிக் என 5 நிறங்களில் கிடைக்கின்றது.
Bajaj Chetak Electric Scooter on-road Price in TamilNadu
2024 பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை தோராயமானது மாறுதலுக்கு உட்பட்டது
- Bajaj Chetak 2901 – ₹ 1,08,865
- Bajaj Chetak 2901 Tecpac – ₹ 1,12,965
- 2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,32,562
- 2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,38,741
- 2024 Bajaj Chetak premium – ₹ 1,56,656
- 2024 Bajaj Chetak premium Tecpac – ₹ 1,63,465
Bajaj Chetak Rivals
பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஓலா S1 Pro, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் 450எஸ், ஏதெர் 450X, ஹீரோ விடா, மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
FAQ’s About Bajaj Chetak
பஜாஜ் சேட்டக் பவர் மற்றும் டார்க் விபரம் ?
சேட்டக் பேட்டரி மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள BLDC வகை மோட்டாரிலிருந்து 3,800 W தொடர்ந்து வெளிப்படுத்தும், அதிகபட்சமாக 4,080 W பவர் வரை வெளிப்படுத்துகின்றது.
சேட்டக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் எவ்வளவு ?
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்ச ரேஞ்ச் 126 கிமீ (பிரீமியம் 2024) மற்றும் அர்பேன் 113 கிமீ ஆகும்.
பஜாஜின் சேட்டக் ஆன்-ரோடு விலை எவ்வள்வு ?
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் 2024 ஆன்-ரோடு விலை ₹ 1.24 லட்சம் முதல் ₹ 1.55 லட்சம் ஆகும்.
பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு ?
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 73Km/hr ஆகும்.
பஜாஜ் சேட்டக் சார்ஜிங் நேரம் எவ்வள்வு ?
650 watts சார்ஜர் பெற்று 2024 சேட்டக் அர்பேன் ஸ்கூட்டர் சார்ஜிங் நேரம் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.