ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குடும்பத்திற்கான ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9Kwh S, 2.9Kwh Z, மற்றும் 3.7 Kwh Z என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Ather Rizta
ஸ்போர்ட்டிவ் ஏதெர் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷன், மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான சில பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பத்திற்கு ஏற்ற வகையில் அதிக இடவசதி, மிக நீளமான மற்றும் அகலமான இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
34 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்று மூன்று வேரியண்டிலும் பொதுவாக PMSM மோட்டாருடன் 2 விதமான மாறுபட்ட பேட்டரி பெற்றாலும் 4.3KW பவர், 22Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ மற்றும் 0-40 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டுகின்றது.
மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்புறத்தில் 200மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று 165மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1285 மிமீ வீல்பேஸ் பெற்று 90/90-12 மற்றும் பின்புறத்தில் 100/80-12 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது.
ஏதெர் Rizta S 2.9Kwh வேரியண்டில் 2.9Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சார்ஜில் 123 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ கொண்டு ஜிப், ஸ்மார்ட்ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 95-100 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 6.30 மணி நேரம் போதுமானதாகும். கூடுதலாக விரைவு சார்ஜர் வசதியும் உள்ள நிலையில் 7 அங்குல தொடுதிரை அல்லாத டீப்வியூ கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக உள்ளது.
ஏதெர் Rizta Z 2.9Kwh பேட்டரி ரிஸ்டா S போல ரேஞ்ச் மற்றும் பேட்டரி பெற்றாலும் 7 அங்குல டிஎஃப்டி டச்ஸ்க்ரீன் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக பெற்று கூகுள் மேப், மேஜிக் ட்விஸ்ட் , டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பல்வேறு வசதிகள் உள்ளது.
Rizta Z 3.7Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 159 கிமீ பயணிக்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு மணிக்கு அதிகபட்ச வேகம் 80 கிமீ கொண்டு ஜிப், ஸ்மார்ட்ஈக்கோ என 2 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 120 கிமீ பயணிக்கலாம். 7 அங்குல டிஎஃப்டி டச்ஸ்க்ரீன் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் புரோ ஆப்ஷனலாக பெற்று கூகுள் மேப், மேஜிக் ட்விஸ்ட் , டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பல்வேறு வசதிகள் உள்ளது.
Ather Rizta | Rizta S | Rizta Z | Rizta Z |
மோட்டார் வகை | PMSM | PMSM | PMSM |
பேட்டரி | 2.9Kwh | 2.9kwh | 3.7kwh |
பவர் | 4.3kW | 4.3kW | 4.3kw |
டார்க் | 22 NM | 22 NM | 22 NM |
ரேஞ்சு (IDC) | 123 Km | 123 Km | 159Km |
ரைடிங் ரேஞ்சு | 100 Km | 100 Km | 120km |
அதிகபட்ச வேகம் | 80 Kmph | 80 Kmph | 80 Kmph |
சார்ஜிங் நேரம் (0-80%) | 6 hrs 30 Mins | 6 hrs 30 mins | 4 hrs 30 mins |
ரைடிங் மோடு | Zip & SmartEco | Zip & SmartEco | Zip & SmartEco |
கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புரோ பேக் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் ஏதெர்ஸ்டேக் 6 மேம்பாடு, ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 30,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது.
- Ather Rizta S 2.9Kwh – ₹ 1,12,811
- Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,26,812
- Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,28,311
- Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,45,312
- Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,48,312
- Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,68,312
(Ex-showroom)
2025 Ather Rizta electric Scooter on-Road Price in Tamil Nadu
2025 ஏதெர் ரிஸ்டா எஸ், ரிஸ்டா இசட், ரிஸ்டா இசட் 3.7Kwh என மூன்று விதமான ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Ather Rizta S 2.9Kwh – ₹ 1,20,533
- Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,34,554
- Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,36,302
- Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,53,302
- Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,56,578
- Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,76,578
(All Price on-road Tamil Nadu)
- Ather Rizta S 2.9Kwh – ₹ 1,20,742
- Ather Rizta S 2.9Kwh + Pro – ₹ 1,34,745
- Ather Rizta Z 2.9Kwh – ₹ 1,36,486
- Ather Rizta Z 2.9Kwh + pro – ₹ 1,53,486
- Ather Rizta Z 3.7Kwh – ₹ 1,56,757
- Ather Rizta Z 3.7Kwh + pro – ₹ 1,76,757
(All Price on-road Pondicherry)
2025 ஏதெர் ரிஸ்டா நுட்பவிபரங்கள்
Ather Rizta Specs | Rizta s/Rizta Z/ Rizta Z 3.7kwh |
மோட்டார் | |
வகை | எலெக்ட்ரிக் |
மோட்டார் வகை | PMSM மோட்டார் |
பேட்டரி | 2.9Kwh/3.7 Kwh Lithium ion |
அதிகபட்ச வேகம் | 80 Km/h |
அதிகபட்ச பவர் | 4.3kw |
அதிகபட்ச டார்க் | 22 Nm |
அதிகபட்ச ரேஞ்சு | 123/159 km per charge (IDC Claimed) |
சார்ஜிங் நேரம் | 4.30 மணி நேரம் (0-80%) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டியூப்லெர் |
டிரான்ஸ்மிஷன் | ஆட்டோமேட்டிக் |
ரைடிங் மோட் | Zip, Smart Eco |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | மோனோஷாக் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 200மிமீ |
பின்புறம் | டிரம் 130 மிமீ (with CBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 90/90-12 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 100/80-12 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
ஹெட்லைட் | எல்இடி |
சார்ஜர் வகை | Portable 700W |
கிளஸ்ட்டர் | 7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,850 mm |
அகலம் | 750 mm |
உயரம் | 1140 mm |
வீல்பேஸ் | 1285 mm |
இருக்கை உயரம் | 780 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 165 mm |
பூட் கொள்ளளவு | 34 Litre |
எடை (Kerb) | 119 kg |
ஏதெர் ரிஸ்டாவின் ஸ்கூட்டரின் நிறங்கள்
ரிஸ்டா எஸ் வேரியண்ட் வெள்ளை, கிரே மற்றும் ப்ளூ என மூன்று ஒற்றை வண்ணத்தை பெற்றுள்ள நிலையில் ரிஸ்டா இசட் இந்த மூன்று நிறங்களுடன் கூடுதலாக டூயல் டோன் கொண்ட பச்சை, மஞ்சள், கிரே மற்றும் ப்ளூ என ஒட்டுமொத்தமாக 7 நிறங்கள் உள்ளன.
Ather Rizta Rivals
டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஓலா எஸ்1, சேத்தக், ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.
Faq ஏதெர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஏதெரின் ரிஸ்டா எலெக்ட்ரிக் மைலேஜ் எவ்வளவு ?
ரிஸ்டா 2.9 Kwh பேட்டரி உண்மையான ரேஞ்ச் 90-100 கிமீ வெளிப்படுத்தும், ரிஸ்டா 3,7Kwh மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை கிடைக்கும்.
ரிஸ்தா இ-ஸ்கூட்டரின் பவர் மற்றும் டார்க் விபரம் ?
PMSM மோட்டார் பொருத்தப்பட்டு பவர் 4.3Kw வழங்குகின்றது. டார்க் 22 Nm வழங்குகின்றது.
ஏதெர் ரிஸ்டா ஆன்-ரோடு விலை எவ்வளவு ?
ஏதெர் ரிஸ்டா மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.21 லட்சம் முதல் ரூ.1.77 லட்சம் வரை அமைந்தள்ளது.
Rizta மாடலை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?
ரிஸ்டா இ-ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் 0-100% பெற 2.9kwh - 8.30 மணி நேரம் ரிஸ்டா 3.7 kwh - 5.45 மணி நேரம்
ரிஸ்டா போட்டியாளர்கள் யார் ?
டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1, ஏதெர் 450, சேத்தக், ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.