புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யமஹா நிறுவனத்தின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான R9 மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தற்பொழுது விற்பனையில் உள்ள MT-09 நேக்டூ பைக்கில் இருந்து பெறப்பட்ட எஞ்சினை பெற்றிருக்கின்றது.
Yamaha YZF-R9
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய R9 பைக்கின் சேஸ் எடை 9.7 கிலோ மட்டுமே அமைந்துள்ள மிக வலுவான அலுமினியம் டெல்டா பாக்ஸ் ஃபிரேம் ஆகும். இந்த மாடலில் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் வெள்ளை என மூன்று நிறங்கள் உள்ளது.
யமஹாவின் பாரம்பரியமான ஃபேரிங் ஸ்டைல் R சீரிஸ்களில் இருந்து பெறப்பட்டுள்ள மிக நேர்த்தியான பேனல்கள் ஏரோ டைனமிக் அம்சத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் விளக்கு மற்றும் ரன்னிங் விளக்குடன் இணைக்கப்பட்டு மிக நேர்த்தியான ஃபேரிங் பேனல் எட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
R9 பைக்கில் உள்ள 890cc, லிக்விட் கூல்டு 3-சிலிண்டர் என்ஜின் அதிகபட்ச குதிரைத்திறன் 117 bhp, மற்றும் 93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளது.
320 மிமீ டூயல் டிஸ்க் Brembo பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் KYB 43 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் உள்ளது.
YZF-R9 பைக்கின் எலக்ட்ரானிக் சார்ந்த அம்சங்களில் அனைத்தும் IMU-அடிப்படையிலான அமைப்பு, டிராக்ஷன் கட்டுப்பாடு, வீலி கட்டுப்பாடு, கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் Sport, Street, Rain ரைடிங் முறைகள் ஆகிய அம்சங்களுக்கான அமைப்புகளை சுவிட்ச் கியர் மூலம் எளிதாக அணுகலாம், 5 அங்குல கலர் TFT கிளஸ்ட்டரில் யமஹாவின் மைரைடு செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும், இது தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு விபரங்களை அறியலாம்.
சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற யமஹா YZF-R9 மாடலின் விலை ரூபாய் 10.50 லட்சம் (தோராயமாக) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு இந்த மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.