இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் XSR155 மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் யமஹா அறிமுகம் செய்யுமா.? என்ற கேள்விக்கு தான் தற்பொழுது வரை தெளிவான விடை கிடைக்கவில்லை.
இருந்தாலும் கடந்த மாத சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கால் ஆப் த ப்ளூ டீசரை வெளியிட்டு இருந்தது அதில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் மாடலும் இடம்பெற்று இருந்தது பல்வேறு பிரிமீயம் மோட்டார்சைக்கிள்களும் இடம் பெற்று இருந்தன ஒருவேளை இந்திய சந்தைக்கு இந்த மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது உறுதியாக வருகின்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 அரங்கில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
XSR 155 பைக்கின் ரெட்ரோ டிசைன் அமைப்பு மற்றும் சக்தி வாய்ந்த R15 மற்றும் எம்டி-15 போன்ற பைக்குகளில் இடம் பெற்று இருக்கின்ற 18.1 hp , 14.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 155 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் போன்றவை எல்லாம் இந்த மாடலுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக உள்ளது.
யமஹா நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தைக்கு என எஃப்இஸட்-எக்ஸ் மாடலை ஏறக்குறைய எக்ஸ்எஸ்ஆர் 155 போன்ற அமைப்பில் உருவாக்கி 150சிசி இன்ஜின் பிரிவில் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்த மாடலில் ஹைபிரிட் அம்சம் ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் இடம் பெற்று இருக்கின்ற ஹைபிரிட் டெக்னாலஜியை கொண்டு வருவதனால் கூடுதல் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஹைபிரிட் வசதி மூலம் சற்று கூடுதல் பவர் தேவைப்படும் இடங்களில் பேட்டரி உதவி புரியும். 2025 ஆம் ஆண்டிற்கான புதிய FZ-X மற்றும் fZ-S மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2025-ல் விற்பனைக்கு வெளியாகுவது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த மாடல்களை விட கூடுதல் பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் சிறப்பான ரெட்ரோ வடிவமைப்பினை கொண்ட XSR 155 மாடலும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடுவது குறித்தான முக்கிய தகவல்களை இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி 17ஆம் தேதி இதன் முக்கிய விபரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.