புதிதாக யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 250 சிசி ஃபேஸர் 25 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனலாகவும் வழங்கப்படவில்லை என்பது பலருக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏபிஎஸ் பிரேக் கட்டாயம்
அடுத்த ஆண்டு முதல் 125 சிசி க்கு மேற்பட்ட ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என்ற நடைமுறைக்கு வரவுள்ளதை தொடர்ந்தே ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்படும் என இந்தியா யமஹா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பஜாஜ், டிவிஎஸ், சுசூகி போன்ற நிறுவனங்கள் 160 சிசி மற்றும் 200 சிசி பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கினை ஆப்ஷனலாக வழங்கி வருகின்றது.
ஆனால் சமீபத்தில் வெளியான நேக்டூ FZ25 பைக் அடிப்படையிலான ஃபேரிங் செய்யப்பட்ட ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வழங்கப்படவில்லை என்பது இங்கே குறிப்படதக்கதாகும்.
வரும் ஏப்ரல் 2018 முதல் 125 சிசிக்கு மேற்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. பயன்பாட்டில் உள்ள மோட்டர் சைக்கிள்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு கட்டயாமாகும்.