அடுத்த ஆண்டின் தொடக்கத்தில விற்பனைக்கு வரவுள்ள புதிய யமஹா ரே ZR125 மற்றும் யமஹா ரே ZR125 ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டர்கள் ஃபேசினோ அறிமுகத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது. 113 சிசி என்ஜினுக்கு பதிலாக பிஎஸ்6 125சிசி என்ஜினை பெற உள்ளது.
புதிய யமஹா ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டர்களில் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சிஸ்டம் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. இது முன்பாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம் பெற்றிருந்தது. மேலும், பிஎஸ்4 நடைமுறையுடன் 110சிசி என்ஜின் பெற்ற யமஹா ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்க உள்ளது.
8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 113சிசி மாடலை விட சிறப்பான முறையில் 16 சதவீதம் எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி மைலேஜ் லிட்டருக்கு 58 கிமீ ஆகும்.
இந்த மாடலில் சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆப் சுவிட்ச், பல பயன்களுக்கான கீ, மடிக்கக்கூடிய ஹூக், யூ.எஸ்.பி சார்ஜிங் மற்றும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது மாறுபட்ட வண்ணங்களில் வழங்கப்படும். தற்போது விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட 10-15 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.