முந்தைய பிஎஸ்4 மாடலை விட மேம்பட்ட பிஎஸ்6 என்ஜின் மற்றும் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ள யமஹா ரே ZR125 மற்றும் யமஹா ரே ZR125 ஸ்ட்ரீட் ரேலி என இரு மாடல்களின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள 113சிசி மாடலை விட சிறப்பான முறையில் 16 சதவீதம் எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி மைலேஜ் லிட்டருக்கு 58 கிமீ ஆகும்.
இந்த மாடலில் சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆப் சுவிட்ச், பல பயன்களுக்கான கீ, மடிக்கக்கூடிய ஹூக், யூ.எஸ்.பி சார்ஜிங் மற்றும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது மாறுபட்ட வண்ணங்களில் வழங்கப்படும். தற்போது விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட 10-15 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.
முந்தைய மாடலை விட ரூ.11,850 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்பாக 110சிசி என்ஜினை பெற்றிருந்தது. தற்போது புதிய 125சிசி என்ஜினை பெற்றுள்ளது.
யமஹா ரே இசட்ஆர் 125 – ரூ. 68,010
யமஹா ரே இசட்ஆர் 125 ரூ. 71,010
ரே இசட் 125 ஸ்ட்ரீட் ரேலி ரூ. 72,010
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)