Categories: Bike News

யமஹா R3, MT-03 ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பு..!

yamaha mt03

இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வருகின்ற ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் நேக்டூ ஸ்டைல் MT-03 என இரண்டு பைக் மாடல்களும் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் பொதுவாக 321cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ஃபேரிங் ஸ்டைல் பெற்ற 298 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் முன்புறத்தில் 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும்  அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் வழங்கப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்கும். 14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு ஆர்3 பைக்கின் மொத்த எடை 169 கிலோ மட்டுமே ஆகும்.

  • Yamaha MT-03 – ₹ 3,50,639
  • Yamaha R3 – ₹ 3,55,639

R3 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் ஏப்ரிலியா RS 457, கேடிஎம் RC 390, டிவிஎஸ் அப்பாச்சி RR 310R, கீவே K300 R கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

யமஹா MT-03 பைக்கிற்கு சவாலாக பிஎம்டபிள்யூ G310 R, கேடிஎம் 390 டியூக், மற்றும் கீவே K300 N போன்றவை இடம்பெறுள்ளது.

Share
Published by
Automobile Tamilan Team